Slokas4kids.blogspot.com - Tiruvempavai #12

இறைவனே ஆக்கவும், அழிக்கவும், காக்கவும் வல்லவன் என்பது அறிந்த விஷயம். இது நன்றாகத் தெரிந்தும் அவனைப் புரிந்து கொள்ளாமல், தான் என்ற அகங்காரத்துடன் திரிபவர்களே உலகில் அதிகம்.

உலகம் என்ற நாடகத்தில் நமக்கு தரப்பட்டுள்ள பாத்திரத்திற்குரிய இந்த நடிப்பை கைவிட்டு, அவனை அடைய வழி தேட வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

Audio
Ragam : Hindolam
Talam : Adi


பாடல் 12:

ஆர்த்த பிறவித்துயர் 
கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் 

சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் 
குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் 

கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி 
வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய 

அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை 
குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை 

நீராடேலோர் எம்பாவாய்...

Padal 12:

Arththa piRavith 
thuyarkedanAm 
ArththAdum 
thIrththan naRRillai 

chiRRambalaththE thIyAdum 
kUththan ivvAnum 
kuvalayamum 
ellOmum 

kAththum padaiththum 
karandhum viLaiyAdi
vArththaiyum pEchi 
vaLaichilamba vArkalaikaL
  
Arpparavam cheyya 
aNikuzalmEl vaNdArppa 
pUththikazum poykai 
kudaindhudaiyAn poRpAdham 
Eththi irunychunainI rAdElOr empAvAyy...

பொருள்:

♫தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான்.

♫ அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

Meaning :

♫ The One with chaste water(river), whom we chant and dance in order to get rid of the roaring suffering of birth.

♫ The Fire Dancer at the tiny hall of nice thillai. Protecting, creating and removing this sky, world and all of us as a play, speaking the (sacred) words, the bangles tingling, the ornating snakes hissing, the bees buzzing on the decorated plait (He dances).

♫ Striking the (water in the) floral pond, praising the Golden Foot of the Lord, take a bath in this nice water.
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe