குரோதி வருஷம் துலா காவேரி ஸ்நானம்
18-10-2024 முதல் 15-11-2024
ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் ஸ்ஞ்சரிப்பதால் ஐப்பசி மாதத்திற்கு துலா மாதம் எனப்பெயர். இந்த மாதத்தில் கங்கை, யமுனை, கோதாவரீ முதலிய அனைத்து புண்ய நதிகளும் காவேரிக்கு வருவதாக ஐதிகம்.
இந்த ஐப்பசி மாதம் முப்பது நாட்களிலும் காவேரியில் முறைப்படி ஸ்னானம் செய்வது அனைத்து பாபங்களையும் போக்குவதோடு மன நிம்மதியையும் தரும். இயலாதவர்கள் த்ரிராத்ரம் ஜாஹ்ணவீதீரே என்றவாறு மூன்று நாட்களாவது காவேரியில் ஸ்னானம் செய்யலாம்.
காவேரி ஸ்னானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்:
नमस्ते तटितां मुख्ये निगमागम सम्स्तुते
पापकायं पारिशुध्यं आयुरारोग्य मेव च ।
सौभाग्यमपि सन्तानं ज्ञानं देहि मरुधे ।।
मरुदूधे महादेवि महाभागे मनोहरे ।
श्री कावेरि नमस्तुभ्यं मम पापं व्यपोहय ||
நமஸ்தே தடிதாம் முக்யே
நிகமாகம ஸம்ஸ்துதே
பாபகாயம் பாரிஷுத்யம்
ஆயுராரோக்ய மேவ ச |
ஸௌபாக்யமபி ஸந்தானம்
ஞானம் தேஹி மருதே ||
மருத் வ்ருதே மஹாதே'வி!
மஹாபாகே! மநோஹரே!
ஸ்ரீகாவேரி! நமஸ்துப்யம்
மம பாபம் வ்யபோஹய ||
Namasthe tatithaam mukye
Nigamaagama Samsthuthe
Paapakaayam paarishudyam
Ayurarogya meva cha |
Sowbhagyamapi santhaanam
Gnanam dhehi marudhe ||
Marudhvruthe mahaadevi
Mahaabage! Manohare!
Sri Kaveri! Namasthubhyam
mama Paapam vyapohaya ||
Meaning:நதிகளுக்குள் முக்கியமானவளே! வேத ஆகமங்களால் போற்றப்படுபவளே! பாபத்தாலான எனது உடலை பரிசுத்தமாக்கு, ஆயுள், ஆரோக்யம், ஸௌபாக்யம், ஸந்தானம், ஆத்ம ஞானம் ஆகியவற்றையும் தந்து அருள்வாய்.ஹே மருத்வருதே!. ஹே மஹாதேவி மஹாபாக்யவதியே! மனதிற்கு இனிமையானவளே!, ஸ்ரீ காவேரி தேவியே! எனது பாபங்களை போக்குவாயாக, என்று ப்ரார்தித்து நதியின் ப்ரவாஹத்தை எதிர் நோக்கிஸ்நானம் செய்ய வேண்டும்.
Click here to view Kaveri Prarthana Sloka
Significance of Thula Snanam:
💦 During Thula Snanam period the day and night will be equal. Hence this month is called Thulam (Balance). It is considered sacred to take dip in River Kavery, during the Thula Snanam period.
💦 It is believed that taking dip in Kavery during Thulam Snanam period is like taking dip in River Ganges and other holy rivers.
💦 Special Abhishekam with River Kavery thirtham will be held in Srirangam, Mayiladuthurai (Maayuram) and other temples. In Srirangam, Kavery Thirtham will be carried in Golden Kalasam at the top of elephant for Sriranganathar Abhishekam.
💦 Taking dip on Amavasya (new moon day) day that comes in the thula snanam period is considered more sacred. Taking dip on last day of Thula snanam period is called as Kadai Muzhuku.
Mudavan Muzhuku :
👉 Once a mudavan, from a far away village proceeded towards Maayavaram to have Thulasnanam. Due to his disability, he could reach Mayiladuthurai only after the Thula snanam period is over. He was very sad and prayed to Lord Shiva.
👉 Lord Shiva appeared before him and said that he can take dip in Kavery and he would the benefit of taking dip in Thula Snanam period. The first day of Karthigai month is observed as Mudavan Muzhuku. Many would take dip on this day in River Kavery.