Audio


अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥

Asmin Paraathman 
Nanu Paadmakalpe
Thvamithamutthaapitha 
Padmayonihi |

Anantha Bhoomaa 
Mama Roga Raashim,
Nirundhi Vaathaalaya 
Vaasa Vishno ||

அஸ்மின் பராத்மன் 
நனு பாத்மகல்பே
த்வமித்தமுத்தாபித 
பத்மயோனிஹி |

அனந்த பூமா 
மம ரோக ராஷிம்
நிருந்தி வாதாலய 
வாச விஷ்ணோ ||

Meaning :
O Supreme Lord of incomprehensible powers, in this age known as the Paadma Kalpa, Thou thus brought into existence the Creator Brahmaa. O Lord Vishnu! Who has manifested in the temple of Guruvaayur, please eradicate my ailments.
பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம் தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை அடக்கியருள வேண்டும்.

குருவாயூரப்பனின் கருணை கடாக்ஷம் 
- ஓர் பக்தருக்கு ஏற்பட்ட அனுபவம் 

ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, "என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, "தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். "நன்னாயிட்டியே!" என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், "ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்" என்றார் அவர்.

அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.


மஹா பெரியவா அருள்வாக்கு

Slokas4kids - Mahaperiyava
"நம் சரீரத்துக்கு எந்த வியாதி வந்தாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தைக் கொடுப்பதற்கு ஸ்வாமியினாலே கொடுக்கப்பட்டவை; இவை எல்லாம் தபஸே..." என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe