பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். 

எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.

நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கி சைகை காட்டுகிறானாம். 

தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

 Ragam : Sahana         Talam : Adi

பாசுரம் 19:
குத்து விளக்கெரியக் 
கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற 
பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் 
நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! 
வாய் திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! 
நீயுன் மணாளனை
எத்தனை போதும் 
துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் 
பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று 
தகவேலோர் எம்பாவாய்...

Pasuram 19:
kuththu viLakkeriya 
kOttu(k) kaal kattil mEl
meththenRa pancha 

sayanaththin mEl ERi(k)

koththalar poonguzhal 
nappinai kongai mEl
vaiththu(k) kidandha 

malar maarbaa vaay thiRavaay !

mai(th) thadam 
kaNNinaay nee un maNaaLanai
eththanai pOdhum 

thuyilezha ottaay kaaN

eththanaiyElum 
pirivu aatragillaayaal
thaththuvam anRu 

thagavElOr embaavaay...


பொருள்:
✸ குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே!

 நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. 

✸ காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

Meaning :

✸ Oh Lord, with lamps glowing around you and sleeping on a bed with legs made of  ivory and resting on a soft bed with your broad chest studded between the bosoms of Nappinai (whose hair is adorned with lots of flowers), please wake up. 

✸ Oh young lady (reference to Napinnai) with black and wide eyes adorned with collyrium (kaajal) you have not decided to wake up your husband Krishna, even for a moment. 

✸ You are not ready to bear the separation from the Lord even for a while and this does not suit your 
pure character with unbounded mercy.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe