கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! 

அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். 

வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலாமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். 

அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

   Ragam : Atana        Talam : Rupakam 
பாசுரம் 13:

புள்ளின்வாய் கீண்டானை 
பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் 
கீர்த்திமை பாடிப்போய் !

பிள்ளைகள் எல்லாரும் 
பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து 
வியாழம் உறங்கிற்று !

புள்ளும் சிலம்பின காண் 
போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் 
குடைந்துநீர் ஆடாதே !

பள்ளிக்கிடத்தியோ! 
பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து 
கலந்தேலோர் எம்பாவாய்...

Pasuram 13 :

puLLin vaay keendaanai(p) 

pollaa arakkanai(k)
kiLLi(k) kaLaindhaanai(k) 
keerththi mai paadi(p) pOy(p)

piLLaigaL ellaarum 
paavai(k) kaLambukkaar
veLLi ezhundhu 
viyaazham uRangitru

puLLum silambina kaaN 
pOdhari(k) kaNNinaay
kuLLa(k) kuLira(k) 
kudaindhu neeraadaadhE

paLLi(k) kidaththiyO! 
paavaay! nee nan naaLaal
kaLLam thavirndhu 
kalandhElOr embaavaay...

பொருள்:
 பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது.

✸ கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன.

✸ தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்?

✸ அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா?

 எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

Meaning :

✸ 
We have come singing in praise of the bravery of the Lord, who ripped apart the Asura (Bakasura) who came in the form of a bird (crane) and the lord, who destroyed the Ravana as if it were child's play and now we have entered the designated place to  perform our vows.The Venus has now risen and the Jupiter has already set.

✸ Birds have started to move in flocks in search of food .

✸ Oh Young and naturally beautiful girl with charming eyes resembling a flower and that of a doe's, don't try to enjoy Krishna all alone by yourself and it is such a surprise that you are sleeping in the bed instead of joining us to take a dip in the cold waters.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe