கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது.
வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும்.
வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள்.
நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
Ragam : Ananda bairavi
Talam : Adi
பாசுரம் 14:
உங்கள் புழக்கடை
தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை
வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில்
தங்கள் திருக்கோயில்
சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம்
எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்
நங்காய்! எழுந்திராய்
நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம்
ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை
பங்கயக் கண்ணானை
பாடலோர் எம்பாவாய்...
Pasuram 14:
Pasuram 14:
ungaL puzhakkadai(th)
thOttaththu vaaviyuLsengazhuneer vaay negizhndhu
aambal vaay koombina kaaN
sengaR podi(k) koorai
veNbal thavaththavar
thangaL thirukkOyil
sangiduvaan pOdhanRaar
engaLai munnam
ezhuppuvaan vaaypEsum
nangaay ezhundhiraay
naaNaadhaay naavudaiyaay
sangOdu chakkaram
Endhum thadakkaiyan
Pangayak kanaanai
padalor Embavai...
பொருள்:
✸ எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே!
✸ கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன.
✸ ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.
✸ ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
Meaning :

✸ Oh girl , who speaks kind words, who promised to wake us all, you should be ashamed for failing to do so.
✸ In your backyard pond, red lotuses have bloomed along with Aambal flowers. Sanyasis in their saffron robes and with pearl like teeth have started proceeding towards the temple to blow their conches.
✸ Please wake up to sing the praises of the Lord with beautiful lotus like eyes and powerful hands that holds a Conch in one hand and a Discus (Chakra) in the other.