Ragam: Dhanyasi
Talam: KandaChapu

பாசுரம் #8:

கீழ்வானம் வெள்ளென்று 
எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் 
மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை 
போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் 
கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் 
பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை 
மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் 
சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து 
அருளேலோர் எம்பாவாய்...

Pasuram #8 :

keezh vaanam 
veLLenRu 
erumai siRu veedu
mEyvaan parandhana kaaN 
mikkuLLa piLLaigaLum

pOvaan pOginRaarai(p) 
pOgaamal kaaththu unnai(k)
koovuvaan vandhu ninROm 
kOdhugalam udaiya

paavaay ezhundhiraay 
paadi(p) paRai kondu
maavaay piLandhaanai 
mallarai maattiya

dhEvaadhi dhEvanai(ch
chenRu naam sEviththaal
aavaavenRu aaraayndhu 
aruLElOr embaayaay...


பொருள்:
✸ மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே!

 கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள். 

✸ அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். 

✸ கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு.

Meaning :
The eastern sky has been lit up (indicating sun rise), the buffaloes have been let loose to graze for a short time (before they are milked). 

The remaining girls who wanted to proceed (to worship) are held up and are standing outside. Oh happy girl, please wake up and sing the praise of the Lord, who split the wrestlers that opposed Him. 

If we worship the Lord of the lords, He is surely bound to analyze our needs with great compassion and satisfy them by His grace.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe