உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். 

இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். 

அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

Ragam : Hamir Kalyani     Talam : Adi

பாசுரம் 9:
தூமணி மாடத்து 
சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் 
துயிலணை 
மேல் கண்வளரும்

மாமன் மகளே! 
மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? 
உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் 
செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் 
மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் 
வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் 
நவின்றேலோர் எம்பாவாய்.

Pasuram 9 :

ThoomaNi maadaththu 
Sutrum viLakkeriya(th)
Thoopam kamazha(th)
ThuyilaNaimEl kaN vaLarum

Maamaan magaLE
MaNi(k) kadhavam thaazh thiRavaay
Maameer avaLai
EzhuppeerO un magaL thaan

OomaiyO anRi
SevidO ananthalO
Ema(p) perunN thuyil
Mandhira(p) pattaaLO

Maamaayan maadhavan
Vaikundhan enRenRu
Naaman palavum
NavinRElOr enbaavaay..


பொருள்:
பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! 

✸ உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! 

✸ அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. 

✸ எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன்,  மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

Meaning :
✸ Oh uncle's daughter, sleeping on a bed in a wonderfully ornamented hall with lamps and incense burning all around, get up and open the latches of your ornate door.

✸ Oh Aunty, please wake up your daughter, who is sleeping as if she is dumb and deaf and like a spell that has been placed on her to continue sleeping. 

✸ Cast off your sleep and shall recite the many names of our Lord (Madhavan) who is residing in Vaikunda (heaven)

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe