சிவனின் பெருமையை உயர்த்திச் சொல்லும் பாடல் இது. 

போதார் புனை முடியும் என்ற வரிக்கு மலர்களை அணிந்தவன் என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. 

இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா? உனக்கு மல்லிகையையும், ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்கு பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன்.
   Audio for Tiruvempavai 10   

Ragam : SudhaSaveri
Talam : Kandachapu


பாடல் 10:

பாதாளம் ஏழினும் கீழ் 
சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் 
எல்லாப் பொருள்முடிவே!

பேதை ஒருபால் 
திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் 
மண்ணும் துதித்தாலும்

ஓதஉலவா ஒரு தோழன் 
தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் 
கோயிற்பிணாப் பிள்ளைகாள்

ஏதவனூர் ஏதவன்பேர் 
ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் 
பரிசேலோர் எம்பாவாய்.


Padal 10:

pAdhALam EzinuN kIz
choRkazivu pAdhamalar 

pOdhAr punaimudiyum 
ellAp poruLmudivE 

pEdhai orupAl 
thirumEni onRallan 
vEdhamudhal viNNOrum 
maNNun thudhiththAlum 

Odha ulavA oru
thOzan thoNdaruLan 
kOdhil kulaththaran 
than kOyiR piNAppiLLaikAL 

Edhavan Ur EdhavanpEr 
AruRRar Ar ayalAr 
Edhavanaip pAdum 
parichElOr empAvAy

பொருள்:

♫தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! 


நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. 

♫ பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. 

சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. 

யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். 

அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!


Meaning :

♫ Even below the seven underneath worlds is the Beyond-words Flower of foot ! 

♫ The Splendid Hair of floral fragrance is the end of all matters !!

♫ Female oneside, His Holy Form is not one. Beginning vEdhAs, even if the celestial powers and earth praise, Indescribable, that One Friend, residing in the hearts of His servants. 

♫The hara of flawless tradition. Which one is His town ? Which one is His name ? Who related and who not ? What is the way to sing Him?!

* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe