Slokas4kids - Tiruvempavai #7

அதிகாலை வேளையில் தூங்கவே கூடாது. 

நம் பணிகள் காலை நாலரைக்கெல்லாம் துவங்கி விட வேண்டும். மார்கழியில் பனியடிக்கிறதே என்றெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. 

எல்லா தட்பவெப்பங்களுக்கும் தகுந்தாற் போல், நம் உடலைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். காலை தூக்கத்தில் இருந்து விடுபடுவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. 

சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்.
   Audio for Tiruvempavai #7   

Ragam : Reeti Gowlai 
Talam:  Adi

பாடல் #7:
அன்னே யிவையுஞ் 
சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் 
ஒருவன் இருஞ்சீரான் !

சின்னங்கள் கேட்பச் 
சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் 
தீசேர் மெழுகொப்பாய் !

என்னானை என்னரையன் 
இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் 
இன்னந் துயிலுதியோ?

வன்னெஞ்சப் பேதையர் 
போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் 
பரிசேலோர் எம்பாவாய்.!


Padal #7:

annE ivaiyuny 
chilavO pala amarar 
unnaR kariyAn 
oruvan irunychIrAn !

chinnangaL Ketpach 
chivan enRE vAythiRappAy 
ThennAen nAmunnam 
thIchEr mezugoppAy! 

ennAnai en araiyan 
innamudhen RellOmuny 
chonnONkEl vevvERAy 
innanthuyiludhiyO ?

vannenychap pEdhaiyar
pOl vALA kidaththiyAl 
ennE thuyilin 
parichElOr empAvAy...

பொருள்:

♫ தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? 

♫ தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே! 

♫ அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! 

♫ அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? 

பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?

Meaning :

♫  Oh girl ! Is it a play? For many eternal things (amarar) He is not even thinkable. 

♫ The One with nice wealth. On hearing His symbols you would open your mouth saying "shiva". 

♫ Even before completing the word saying "Oh the Lord of South", you would become like the wax put on the fire. 

♫ We are all saying my One, "My King, Sweet nectar" and so many other things, hear. 

♫ Still are you sleeping ? You are lying like the crude hearted females. How powerful is this sleep !!
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe