Slokas4kids.blogspot.com - Tiruvempavai #14

குளிக்கும் போது உலகியல் சிந்தனைகளே மனதில் இருக்கக் கூடாது. 

குறிப்பாக குளியலின் போது இன்ப உணர்வுகளுக்கும், பிற கீழ்த் தரமான எண்ணங்களுக்கும் இடம் தரவே கூடாது. 

இந்த சமயத்தில் நமசிவாய, சிவாயநம என்ற நாமங்களே நாவில் இருந்து வர வேண்டும். 

இந்த திருநாமங்களைச் சொல்லிவிட்டு, அன்றையப் பணிகளை திட்டமிட்டு செய்தால் நம்மை வெற்றி தேடி வரும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

   Audio   
  Ragam : Sudha dhanyasi  
 Talam  : Kandachapu  

பாடல்  14:
காதார் குழையாடப் 
பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட 
வண்டின் குழாம் ஆட

சீதப்புனலாடிச் 
சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி 
அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடி 
சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி 
அந்தமா மாபாடி

பேதித்து நம்மை 
வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி 
ஆடேலோர் எம்பாவாய்...


Padal 14:

kAdhAr kuzaiyAdap 
paimpUN kalanAdak 
kOdhai kuzalAda 
vaNdin kuzAmAdach 

chIdhap punalAdich 
chiRRam balampAdi 
vEdhap poruLpAdi 
apporuLA mApAdich 

chOdhithiRampAdich 
chUzkonRaith thArpAdi 
Adhi thiRampAdi 
andhamA mApAdip 

pEdhiththu nammai 
vaLarththeduththa 
peyvaLaithan pAdhath 
thiRampAdi AdElOr empAvAy...

பொருள்:

♫ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம் பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். 

♫ வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். 

♫ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். 

♫ அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். 

♫பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.

Meaning :

♫ The earring dancing, worn ornaments dancing, the Lady's plait dancing, the crowd of gasps dancing, bathing in the chill water, singing the Tiny Hall, singing the Meaning of vEdhAs, singing the Being of that, singing the nature of the Luminance, singing the enclading bunch of flower konRai, singing the nature of the Source, singing the Being of the end, singing the nature of the foot of the Lady who brought us up, bathe. 
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan

1 Comments

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe