ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல்.
நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி குளிர்ந்து மழையாகிறது என்ற அறிவியல் கருத்தை மாணிக்கவாசகர் 1200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார்.
மேலும், இயற்கையை தெய்வமாக வடித்ததன் மூலம், அதற்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை தெளிவாகச் சொல்லிவிட்டார்.
இன்று இயற்கையை மதிக்காததன் விளைவை கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனியேனும், இயற்கையை மதிப்போமா!
Audio
Ragam : Amruthavarshini
Talam : Adi
முன்னிக்கடலை சுருக்கி
எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து
எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து
எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின்
சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி
நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா
எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு
முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய்
மழையேலோர் எம்பாவாய்..
Padal 16:
munnik kadalaich churukki
ezundhudaiyAL
ennath thigazndhemmai
ALudaiyAL ittidaiyin
ennath thigazndhemmai
ALudaiyAL ittidaiyin
minnip polindhem
pirAtti thiruvadimER
ponnany chilambiR
chilambith thiruppuruvam
chilambith thiruppuruvam
ennach chilaikulavi
nanthammai ALudaiyAL
thanniR pirivilA
eNkOmAn anbarkku
munni avaL namakku
munchurakkum innaruLE
ennap poziyAy
mazaiyElOr empAvAy...
munni avaL namakku
munchurakkum innaruLE
ennap poziyAy
mazaiyElOr empAvAy...
பொருள்:
♫ இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன.
♫ எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது.
♫ எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது.
♫ அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக !
Meaning :
♫ Earlier raising condensing the sea, appearing like the Lord, shining and booming like the waist of Her who rules us, clinging like the clings of the golden anklet over the foot of our Goddess, appearing as a bow like Her eyebrow, like the grace She comes forward and gives first to the lovers of our Lord who is inseparable from Her who enslaved us, shower, Oh rain !
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.