Slokas4kids.blogspot.com - Tiruvempavai 17

இறைவனைத் தேடி நாம் கோயிலுக்குச் செல்ல வேண்டியதில்லை. 

இதோ! அவனே வருகிறான் அழகிய சப்பரத்தில்! இப்போது கூடவா அவனைத் தரிசிக்க தயக்கம்! 

அவன் வருமுன் நீராடி உடல் சுத்தமாகி, நமசிவாய எனச் சொல்லி நின்றால், அவன் நமக்கு சேவகன் போல் சேவை செய்வான். வேறெதுவும் அவன் எதிர்பார்ப்பதில்லை என்பது இப்பாடல் சொல்லும் கருத்து.

 Audio 
 Ragam : Vasantha Bhairavi 
 Talam : Rupakam 


பாடல்  17:
செங்கண் அவன்பால் 
திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் 


இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி 
நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் 
தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் 

தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை 
அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் 
பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் 
பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.


Padal 17:

cheNka NavanpAl thichaimukanpAl
dhEvarkaLpAl eNgum 
ilAdhadhOr inbamnam 
pAladhAk koNguN 

karuNkuzali nanthammaik

OdhAtti iNgunam 
illaNgaL thORum 

ezundharuLich cheNkamalap 

poRpAdhan thandharuLuny 
chEvakanai aNkaN arachai 
adiyONkat kAramudhai

naNkaL perumAnaip 

pAdi nalanthikazap 
paNkayappUm punalpAyndhu 
AdElOr empAvAy

பொருள்:

♫ தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே!

♫செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான்.

♫அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான்.

♫அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.

Meaning :

♫ With the red eyed one, with the direction faced one, with the dhEvAs - the joy that is not present anywhere, giving that joy to us,

♫ bee eating plaited girl, the Red one who pampers us, residing and blessing in all our homes, blessing us giving the red lotus like Golden foot, Charming eyed king, the great Nectar for we slaves, our Lord, singing Him with the goodness booming bathe in the lotus floral water.
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe