Slokas4kids.blogspot.com - Tiruvempavai #9


தனக்கு வரும் கணவன், சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், வாகனம் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திப்பர்வர்கள் பெருகி விட்ட காலம் இது! 

இந்த செல்வம் நிலைத்திருக்குமா! இந்த செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்களா! பக்திமான் ஒருவன் எனக்கு கணவனாக வேண்டும் என்று கேட்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலாவது இன்று இருக்கிறார்களா? 

அன்றைய பெண்கள் தங்கள் கணவன் பக்திமானாக அமைய வேண்டுமென விரும்பினர். அதை இறைவனிடம் கேட்டனர். 

செல்வச்சீமான்களால் நிம்மதியைத் தர முடியாது. பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்க்கை அமையலாம். ஆனால், அதில் இருக்கும் மனநிம்மதி யாருக்கு கிடைக்கும்? என்பது இந்தப் பாடலின் உட்கருத்து.

   Audio for Tiruvempavai 9   

Ragam : Nattakurinji
Talam : Rupakam


பாடல்  9:

முன்னைப் பழம் பொருட்கும் 
முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் 

பேர்த்தும் அப்பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் 
பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் !
அங்கு அவர்க்கே பாங்காவோம் !

அன்னவரே எம் கணவர் 
ஆவார் அவர் உகந்து 
சொன்ன பரிசே தொழும்பாய் 
பணி செய்வோம்!

இன்னவகையே எமக்கு 
எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் 
இலோம் ஏலோர் எம்பாவாய்.

Padal #9:

Munnaip pazamporutkum 
Munnaip pazamporuLE 
Pinnaip pudhumaikkum 
pErththum appeRRiyanE 

unnaip pirAnAgap 
peRRavun chIradiyOm 
unnadiyAr thALpaNivOm 
ANgavarkkE pANgAvOm 

annavarE eNkaNavar AvAr avar 
ukandhu chonna parichE 
thozumbAyp paNicheyvOm 

inna vakaiyE emakkeNkOn 
nalguthiyEl enna kuRaiyum 
ilOmElOr empAvAy...

பொருள்:
♫கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே!

♫ இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம் என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே!

♫ உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம்.

♫ உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம்.

♫ இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.


Meaning :
Oh the Oldest thing of the oldest things ! The recently named latest of the newest things ! 

♫ We, Your disciplined slaves, who got Yourself as our Lord, would bow down to the foot of your slaves; would become friends of them only; 

♫ One like them only would become our husband; we would serve the way he liking tells. If you, our King, bless us this way we are free from any unfulfilment.
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe