நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! 

நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். 

ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். 

இதனால் தான் கூட்டுப் பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.

Ragam : Huseni
Talam  : Misra Chapu
பாசுரம் 11:
கற்றுக் கறவைக் 
கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் 

சென்று செருகச் செய்யும்

குற்றமொன்றில்லாத 
கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் 

புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் 
எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து 

முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே 
செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் 

பொருளேலோர் எம்பாவாய்...

Pasuram 11 :

katru(k) kaRavai(k) 
kaNangaL pala kaRandhu
setraar thiRalazhiya(ch) 
chenRu seru(ch) cheyyum

kutram onRilaadha 
kOvalartham poRkodiyE
putru aravu alkul 
punamayilE pOdharaay

sutraththu thOzhimaar 
ellaarum vandhu nin
mutram pugundhu 
mugil vaNNan pEr paada

sitraadhE pEsaadhE 
selva peNdaatti nee
etrukku uRangum 
poruLElOr embaavaay...

பொருள்:
 கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே!

 புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே!

✸ நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள்.

✸ அவர்கள் மேக வண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே!

✸ இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

Meaning :

 
Oh girl, who manages and milks a herd of cows and calves,who destroys the enemies in battle fields, who is born in a flawless Shepherd community and glitters like gold, who has a waist like that of a cobra's hood.

 Oh beautiful like peacock, we have come singing the praise of Krishna (who is blue in colour) and arrived at the entrance of your mansion. 

✸ Oh one who is dear to us why is that despite our chants that you are still asleep?

2 Comments

Hema Ramesh said…
Very nice way to celebrate marghazi everyday. It has now become a routine to look forward everyday for the posts.
Hema Ramesh said…
Very nice way to celebrate marghazi everyday. It has now become a routine to look forward everyday for the posts.
Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe