கூவின பூங்குயில்
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடு கிடையாது. பேசிக் கொண்டே இறைவனை வணங்குவது, கோயிலுக்குள் உலக விஷயங்களை அலசுவது போன்றவை நிச்சயம் பலன் தராது.
அங்கே, இறைவனின் திருநாமம் மட்டுமே கேட்க வேண்டும். மனதை இறைவனின் பக்கம் திருப்பி, அவனுடைய திவ்ய சரித்திரத்தை மனதில் நினைத்து வழிபட்டால் தான் பலனுண்டு என்பது இப்பாடலின் உட்கருத்து.
Audio for Tiruppalliezhuchi #3
Ragam : Malayamarutham
Talam : Adi
பாடல் 3:
கூவின பூங்குயில்
கூவின பூங்குயில்
கூவின கோழி
குருகுகள் இயம்பின
குருகுகள் இயம்பின
இயம்பின சங்கம்
ஓவின தாரகை
ஒளி ஒளி உதயத்து
ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது
விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல்
தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை
திருப்பெருந்துறையுறை
சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்
எமக்கெளியாய்
எம்பெருமான்
எம்பெருமான்
பள்ளி எழுந்தருளாயே...
Padal 3:
kUvina pUNguyil
kUvina kOzi
kurugukaL iyambina
kurugukaL iyambina
iyambina chaNkam
Ovina thArakai
oLioLi udhayaththu
oruppadu kinRadhu
oruppadu kinRadhu
viruppodu namakkuth
thEvanaR cheRikazaR
RALiNai kAttAy
thirupperunthuRaiyuRai
chivaperu mAnE
yAvarum aRivari yAy
emak keLiyAy
emperu mAnpaLLi
ezundharu LAyE...
பொருள்:
பொருள்:
✸ திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன.
✸ குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது.
✸ நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன்.
✸ எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.

Meaning :
✸ Shouted the cuckoos ! Shouted the hens ! Chirped the sparrows ! Sounded the conches ! Disappeared the stars !
✸ The light, the luminance spreads in the dawn with our joy.
✸ Oh Divine ! Show Your Good ornated parallel feet, Oh Lord shiva of thirupperunthuRai !
✸ Oh Difficult to be understood by anybody ! Oh Simple for us ! My Lord, Bless getting up !!
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.