அது பழச்சுவையென
Slokas4kids.blogspot.com - Tiruppalliezhuchi #7

மிக அருமையான கருத்துடைய பாடல் இது. எது எமைப்பணி கொள்ளும் ஆறு அது கேட்போம் என்ற வரி மிகுந்த சிறப்பைக் கொண்டது. 

கடவுளிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பதை விட, எது சரியென்று படுகிறதோ, அதைச் செய் என்று கேட்பது மேலான கோரிக்கையல்லவா? அவனுக்கு தெரியுமே! நமக்கு என்ன தர வேண்டுமென்று! அதனால் நம்மை அவனிடம் ஒப்படைப்போம். அவன் தருவதை ஏற்றுக்கொள்வோம் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

Audio for Tiruppalliezhuchi #7
Ragam : Malayamarutham
Talam : Adi

பாடல்  7:
அது பழச்சுவையென 

அமுதென அறிதற்கு 
அரிதென எளிதென 
அமரரும் அறியார்

இது அவன் திருவுரு 
இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு 

இங்கு எழுந்தருளும்

மதுவளர்பொழில் திரு
த்தரகோசமங்கை 
உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப்பணி கொளும் 
ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

Padal 7:
adhupazach chuvaiyena 
amudhena aRidhaRku 
aridhena eLidhena 
amararum aRiyAr 

idhuavan thiruvuru 
ivan avan enavE 
eNgaLai ANdukoNdu 
iNgezundharuLum 

madhuvaLar pozilthiru 
uththara kOcha maNgaiyuL 
LAythirup perunthuRai 
mannA edhuemaip 

paNikoLum ARuadhu 
kEtpOm emperumAn
paLLi ezundharu LAyE...

பொருள்:
✸ தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே!

✸ உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது.

✸ உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய்.

✸ எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.

Meaning :

✸ That, is like the taste of the fruits, like the nectar, to know difficult or simple - this even the deathless (amarar - dhEvAs) do not know, that this is His holy form, that This is He ! Graciously appearing here ruling us, Oh the One in thiru uththara kOcha maN^gai of honey breeding gardens ! 

✸ Oh the king of thirupperun^thuRai ! Which is the way of owning our service, (we) would listen to that. My Lord, Bless getting up !!

* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe