மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! 

ஆனால், "நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது" என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். 

ஆம்... ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. 

பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.

 Ragam : Nadanamakriya  
 Talam : Misrachapu 
பாசுரம் 21:
ஏற்ற கலங்கள் 

எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் 

வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் 
மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! 
பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற 
சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு 
வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்துன் 
அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் 

புகழ்ந்தேலோர் எம்பாவாய்.


Pasuram 21:
Etra kalangaL 
edhir pongi meedhaLippa
maatraadhE paal soriyum 
vaLLal perum pasukkaL

aatra(p) padaiththaan 
maganE aRivuRaay
ootram udaiyaay 
periyaay ulaginil

thOtramaay ninRa sudarE 
thuyil ezhaay
maatraar unakku 
vali tholaindhu un vaasaR kaN

aatraadhu vandhu 
un adi paNiyumaa pOlE
pOtriyaam vandhOm 
pugazhndhElOr embaavaay


பொருள்:

✸ கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. 

✸ வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! 

✸ உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

Meaning :

 Oh Lord, Son of Nandagopar who owns a herd of cows that continuously secrete milk from their udders resulting in overflow, the Lord who is glorified by the Vedas, and whose glory can't be described by the Vedas, the Lord who shines brightly, please wake up.

 We have come to the doorsteps of your palace, singing your praise and glory and surrendered to you like your defeated enemies who have lost their power and have taken refuge in you.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe