கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. 

இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். 

சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. 

விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். 

கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.

Ragam : Poorvikalyani
Talam : Misrachapu

பாசுரம் 27:
கூடாரை வெல்லும்
சீர்க் கோவிந்தா!
உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு
யாம்பெறு சம்மானம்


நாடு புகழும்
பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே
தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய
பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம்
அதன்பின்னே பாற்சோறு


மூடநெய் பெய்து
முழங்கை வழிவார
கூடி யிருந்து
குளிர்ந்தேலோர் எம்பாவாய்...



Pasuram 27:

koodaarai vellum 
seer gOvindhaa 
undhannai(p) 
paadi(p) paRai kondu 
yaam peRum sammaanam

naadu pugazhum 
parisinaal nanRaaga(ch)
choodagamE thOL 
vaLaiyE thOdE sevip poovE

paadagamE enRanaiya 
palagalanum yaam aNivOm
aadai uduppOm 
adhan pinnE paaR chORu

mooda ney peydhu 
muzhangai vazhi vaara(k)
koodi irundhu 
kuLirndhElOr embaavaay...

பொருள்:
✸ எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம்.
✸ அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது.
✸ கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு.
✸ புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

Meaning :
✸ Oh Lord Govinda who defeats all who does not fall in line with you, the gift that we would get after singing your praise(on account of our vow) would be that we would adorn ourselves with beautiful ornaments on our hands, ears, legs in such a manner that the whole town would talk about them.
✸ We would drape ourselves in beautiful clothes and then cook rice in milk and mix ghee (clarified butter) to submerge the cooked rice and enjoy the delicious food.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe