சிற்றஞ்சிறுகாலே   




பாசுரம் 29:
சிற்றஞ் சிறுகாலே 
வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே 
போற்றும் பொருள்கேளாய்!

பெற்றம் மேய்த்துண்ணும் 
குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் 
கொள்ளாமற் போகாது

இற்றைப் பறைகொள்வான் 
அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் 
பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் 
உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் 
மாற்றேலோர் எம்பாவாய்...

Pasuram 29:

sitram siRu kaalE 
vandhu unnai sEviththu un 
potraamarai adiyE 
pOtrum poruL kELaay

petram mEyththu uNNum 
kulaththil piRandhu nee 
kutru Eval engaLai(k) 
koLLaamal pOgaadhu

itrai(p) paRai koLvaan 
anRu kaaN gOvindhaa 
etraikkum Ezh Ezh piRavikkum 
un thannOdu

utrOmE aavOm 
unakkE naam aatcheyvOm 
matrai nam kaamangaL 
maatrElOr embaavaay ...

பொருள்:
✸ கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடாதே!
✸ நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தர வேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களை எல்லாம் நீயே அழித்து விடு.

Meaning :
✸ Lord Krishna may we kindly request You to ask the reason of our early morning visit singing the praises of your beautiful lotus like feet.
✸ Oh great one who took birth among the cow-herd community, You cant deny us the humble service rendered to You till now and have come requesting you to grant us the service for today.
✸ Please help us suppress all other desires (other than serving You) as we are ever related to You in birth after birth and would like to remain Your eternal servant.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe