Audio
ApasmAra kuShTa kShayArshaH prameha-
JvaronmAda gulmAdirogA mahAntaH |
PishAchAshcha sarve bhavatpatrabhUtiM
Vilokya kShaNAt tArakAre dravante || 25 ||
अपस्मारकुष्ठक्षयार्शः प्रमेह-
ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं
विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥ २५॥
அபஸ்மார குஷ்ட² க்ஷயார்ஶ: ப்ரமேஹ-
ஜ்வரோந் மாத³கு³ல்மாதி³ ரோகா³ மஹாந்த: ।
பிஶாசாஶ்ச ஸர்வே ப⁴வத்பத்ர பூ⁴திம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்³ரவந்தே ॥ 25॥

என்று பாடியிருக்கிறார்.
பொருள்: "சுப்பிரமண்யா! உன்னுடைய இலை விபூதியை பூசியவுடனேயே கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய எல்லா நோய்களும் நீங்கிவிடும். எந்த விதமான செய்வினைகள், பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விலகிவிடும்."
Meaning: Oh Conqueror of Taraka! Severe epilepsy, leprosy, consumption, lung diseases, venreal diseases, fevers, mental diseases of all types, they run away the moment they apply vibhuti.
ஆம்! இவ்வளவு மகத்துவம் வாய்ந்த ஸ்லோகத்தை இயற்றியது யார் என்பதையும், அது எப்படிப்பட்ட தருணத்தில் இயற்றப்பட்டது என்பதையும் இப்பதிவின் மூலம் அறிந்துகொள்ளலாமா?
ஆதி சங்கரரும் ஸ்ரீ ஸுப்ரமணியனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது.
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது.
ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு கெடுதல் செய்யும் நோக்கத்தில் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் வைத்து விட்டார்.
இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். இடர் உணர்ந்த சங்கரர் இறைவனை நாடி வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று மனமுறுக வேண்டினார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்” என்று கூறினார்.
உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது. கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. 33 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.

அந்த 33 பாடல்களும் கோவிலின் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் (அபஸ்மார குஷ்ட) இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
வடமொழியில் பாம்பை புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும். ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
சூரபதுமன் வதம் முடிந்த பின், முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்கிறது ஸ்தல புராணம்!
ஜெயந்திபுரம் என்றும் திருச்செந்தூர் என்றும் சொல்லப்படும் புண்ணியத் தலத்தில், தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஜெயந்திபுரம் என்றும் திருச்செந்தூர் என்றும் சொல்லப்படும் புண்ணியத் தலத்தில், தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பன்னீர் இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நோய்வாய்ப்பட்டவர்கள், கல்யாணக் கவலையில் வாடுபவர்கள், கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லையே என்று கலங்குபவர்கள்... இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் செந்திலாண்டவரை மனதார வேண்டிக் கொண்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக இலைவிபூதிப் பிரசாதத்தைப் பெற்று, தினமும் இட்டுக் கொள்கின்றனர். அத்தனை சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தது இலை விபூதிப் பிரசாதம்!
இலை விபூதியின் வரலாறு
💫 திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள்.
💫 இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
நாமும் “ஆறுமுகம்” என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமியின் திருவருளுக்குப் பாத்திரமாவோமா!
செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து முருகனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.
தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
அற்புதம் நிகழ்த்திய இலை விபூதி
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது.
தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
“என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்” என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

பன்னீர் இலையின் சிறப்பம்சம்
💫 இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
💫 பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
💫 இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
💫 பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர்.
💫 திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
💫 திருநீற்றைப் பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை விபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
💫 பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள்.
💫 ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள்.
💫 திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள்.
💫 இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
நாமும் “ஆறுமுகம்” என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமியின் திருவருளுக்குப் பாத்திரமாவோமா!
தீப மங்கள ஜோதீ நமோ நம:தூய அம்பல லீலா நமோ நம:தேவ குஞ்சரி பாகா நமோ நம: - அருள்தாராய்!
- Shri Subramanya Bhujangam is a stotra sung under inspiration by Sri Aadi Sankara at Tiruchendur.
- When he meditated upon Sri Subramanya, he became aware of a self luminous light shining in his heart and words came out his mouth in extempore in bhujanga metre.
- Adi Sankara composed this hymn of 33 verses, in the peculiar Bhujanga metre, noted for its sinuous movement like that of a serpent.
- The hymn is full of piety, spiritual exaltation and ecstasy. It also reveals the efficacy of praise, prayer and meditation on Subrahmanya.
- Shri Subrahmanya Bhujangam stotra, the Bhujanga Stotra, is the outcome of the Acharya's ecstasy. It is the high road that connects the human mind with the divine ecstasy.