For English Click here ...

நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. 

காத்யாயனி (Katyayani) என்பது நவராத்திரி கொண்டாட்டங்களில் துர்கா வழிபாட்டின் போது ஆறாவது நாளில் வழிபடப்படும் சக்தியின் வடிவமாகும்.

slokas4kids.blogspot.com - Akilandeswari

நவராத்திரி நாத சமர்ப்பணம்

பாடல் : எந்நேரமும் எந்நாமம் 

Audio 


ராகம் :பூர்விகல்யாணி 
தாளம் : மிஸ்ரசாப்பு 
இயற்றியவர் : ஷ்யாமா சாஸ்திரி


பல்லவி 

என்நேரமும் உன் நாமம் 

உரைப்பதே என் நேமம் அன்னையே

அனுபல்லவி 

புன்னகையுடன் 

கண் பார்த்தென்னை 

எப்போதும் மன்னிப்பதும் 

நீயே என் தாயே

சரணம் 

அன்புடன் உன்னை நான் 

அடைக்கலமடைந்தேன் 

அகிலாண்டேஸ்வரீ அபிராமசுந்தரீ

அனைத்தும் அறிந்த 

ஆதி சக்தி நீயே 

அரவணைத்தென்னை ஆதரி 

ஸ்யாமக்ருஷ்ண சோதரீ



காத்யாயனி 

வாமன புராணத்தில் மகிசாசூரன் என்ற அரக்கனை அழிக்கும் பொருட்டு பல்வேறு கடவுள்களின் சக்திகளின் ஒருங்கிணைப்பின் காரணமாக உருவான தெய்வமாக கூறப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பல்வேறு கடவுளர்களின் சக்திகளின் ஒருங்கிணைப்பினால் வெளிப்பட்ட ஆற்றலின் கதிர்களானது காத்யாயனர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் குவிக்கப்பட்டு காத்யாயனரால் சரியான வடிவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவராக இத்தேவி அறியப்படுகிறார். இதன் காரணமாகவே இத்தேவியானவருக்கு காத்யாயனி என்ற பெயரும் தோன்றியதாக புராணம் கூறுகிறது.


காளிகா புராணத்தில், காத்யாயனாரால் முதலில் வழிபடப்பட்டதால் காத்யாயனி என்ற பெயர் வரப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு புராணங்களுமே இத்தேவியின் வடிவத்தை துர்க்கையின் பூத வடிவமாகவும், நவராத்திர விழாவின் ஆறாம் நாளில் வழிபடப்படும் தெய்வ வடிவமாகவுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிசாசுரன் என்ற அரக்கனால் தேவலோகத்தில் இந்திரன் முதலியவர்களை துன்புறுத்தப்பட்டதாகவும், அவனை எதிர்க்க முடியாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டதாகவும், பிரம்மனின் வழிகாட்டுதலின்படி எல்லோரும் சென்று திருமாலிடம் முறையிடச் சென்றதாகவும், அந்த நேரத்தில் அங்கு சிவனும் இருந்ததாகவும், இதைக் கேட்ட திருமாலும், சிவனும் பெருங்கோபம் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சிவன், திருமால், பிரம்மன் முதலியவர்கள் கோபத்திலிருந்தும் ஒவ்வொரு ஆற்றலும் கிளம்பிற்று. இந்த ஆற்றல்களை எல்லாம் ஒன்று திரட்டி காத்யாயன முனிவர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றனர். 

அம்முனிவர் தம்முடைய ஆற்றலையும் அதனுடன் சேர்க்க எல்லா ஆற்றல் களும் கூடி காத்யாயனி என்ற பெயரில் ஒர் அழகான பெண் வடிவமாக உருவானதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த தேவி வடிவமே சிங்க வாகனத்தில் ஏறி மகிசாசுரனை அழித்ததாகவும் வாமன புராணம் கூறிச் செல்கிறது.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe