நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது.
நவராத்திரி துர்கா பூஜையின் ஏழாம் நாளில் காளராத்திரியை வழிபடுகின்றனர். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமானது காளராத்திரி ரூபம் ஆகும்.
நவராத்திரி நாத சமர்ப்பணம்
பாடல் : அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் Audio
ராகம் : த்விஜாவந்தி
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துஸ்வாமி தீக்ஷிதர்
பல்லவி அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் ஸ்ரீ
ஆகம சம்பிரதாய நிபுணேஸ்ரீ
அனுபல்லவி
நிகிலலோக நித்யாத்மிகே விமலே
நிர்மலே ஸ்யமளே (அம்ப) சகலகலே
சரணம்
லம்போதர குருகுஹ பூஜிதே
லம்பாலகோத்பாசிதே ஹசிதே
வாக்தேவதாராதிதே வரதே
வரஷீலராஜனுதே சாராதே |
ஜம்பாரி ஸம்பாவிதே
ஜனார்தனனுதே
த்விஜாவந்தி ராகணுதே
ஜல்லிமத்தள ஜர்ஜர
வாத்யநாதமுதிதே ஞானப்ரதே | |
நவராத்திரி நாத சமர்ப்பணம்
பாடல் : அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்
Audio
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துஸ்வாமி தீக்ஷிதர்
பல்லவி
அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் ஸ்ரீ
ஆகம சம்பிரதாய நிபுணேஸ்ரீ
அனுபல்லவி
நிகிலலோக நித்யாத்மிகே விமலே
நிர்மலே ஸ்யமளே (அம்ப) சகலகலே
சரணம்
லம்போதர குருகுஹ பூஜிதே
லம்பாலகோத்பாசிதே ஹசிதே
வாக்தேவதாராதிதே வரதே
வரஷீலராஜனுதே சாராதே |
ஜம்பாரி ஸம்பாவிதே
ஜனார்தனனுதே
த்விஜாவந்தி ராகணுதே
ஜல்லிமத்தள ஜர்ஜர
வாத்யநாதமுதிதே ஞானப்ரதே | |
காளராத்திரி
காள என்றால் நேரம், மரணம், என்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.
துர்க்கையின் வடிவம் எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. இவளின் உடல் மழை மேகம் போல் கருமை நிறம் கொண்டது. இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும். அன்னை கழுதை வாகனத்தில் ஏறி வருபவள். இவளின் பார்வை பட்டாலே பாவம் தொலையும் என்றும், பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்றும் நம்புகின்றனர். பக்தருக்கு இவளின் உருவம் பயம் தராது. பக்தருக்கு நன்மை செய்வதால் இவளை 'சுபங்கரி' என்பர்
யோகிகள் இவளின் அருள் கொண்டு ஏழாம் சக்ரமாம் 'சகஸ்ராகாரத்தை' அடைவர்.