For English Click here ...

நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. 

நவராத்திரியின் எட்டாம் நாளாம் துர்காஷ்டமி நாளில் துர்க்கையை 'மகாகௌரி' என வழிபடுகின்றனர். மகா என்றால் பெரிய என்று பொருள். கௌரி என்றால் தூய்மையான எனப் பொருள். இவள் மிகுந்த வெண்மையாக இருப்பதால் மகா கௌரி எனப்படுகிறாள். 

நவராத்திரி நாத சமர்ப்பணம்

பாடல் : சரஸ்வதி தயை நிதி 

slokas4kids.blogspot.com - Saraswati

Audio 


ராகம் : சரஸ்வதி 
தாளம் : ஆதி
இயற்றியவர் : 
பாபநாசம் சிவன் 

பல்லவி 

சரஸ்வதி தயை நிதி நீ கதி

தன்னருள் தந்தருள்வாய் பாரதி

அனுபல்லவி 

கரமலர் மிளிர் 

மணி மாலையும் வீணையும்

கருணை பொழியும் 

கடைக்கண்ணழகும் வளர்

சரணம் 

நின்னருள் ஒளி இல்லையானால்-மன இருள்

நீங்குமோ சகல கலை மாதே - வெள்

அன்னவாஹினி வெண் கமலமலர் வளரும்

வாணி வெள்ளை கலை அணி புராணி


மகாகௌரி

நவராத்திரியின் எட்டாம் நாளாம் துர்காஷ்டமி நாளில் துர்க்கையை 'மகாகௌரி' என வழிபடுகின்றனர். மகா என்றால் பெரிய என்று பொருள். கௌரி என்றால் தூய்மையான எனப் பொருள். இவள் மிகுந்த வெண்மையாக இருப்பதால் மகா கௌரி எனப்படுகிறாள். 

முன்னொரு காலத்தில் பார்வதி சிவனை நோக்கி தவம் செய்த போது அவள் உடல் மண் சூழ்ந்து கருமையானது. அவளின் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவளை மணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அதற்கு முன் தேவியை அவர் கங்கை நீரால் நீராட்டினார். அதனால் தேவியின் உடல் பால் போல வெண்மையானது. இவளே மகாகௌரி.

slokas4kids.blogspot.com - Mahagowri


இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் சூலத்தையும், மறு கரம் மணியையும் தங்கி நிற்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும் வகையில் உள்ளன. இவளின் வாகனம் வெண்மையான காளை ஆகும். இவளின் அருள் கிட்டினால் நம் வாழ்வு வசந்தமாகும். இவள் பக்தர்களின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுவாள் என நம்புகின்றனர்.

இவள் உடல் சக்கரங்களில் 'ஸ்வாதிஷ்டானமாய்' இருப்பவள். யோகிகள் இவளின் ஆசி கொண்டு இந்த சக்கரத்தை அடைவர். துர்க்கையின் வாகனம், ஆபரணம் என அனைத்தும் வெண்மையாக இருக்கும்.

slokas4kids.blogspot.com -  Saraswati

1 Comments

Anand said…
It's very nicely written great work
Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe