Slokas4kids.blogspot.com - Tiruvempavai #3

ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது. இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இந்தப் பாடல் உணர்த்தும் கருத்து.
   Audio for Tiruvempavai #3   
Ragam : Bilahari 
Talam: Adi


பாடல் 3:

முத்தன்ன வெண்நகையாய் 
முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் 
அமுதனென்ற உள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் 
வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் 
பழஅடியீர் பாங்குடையீர்!

புத்தடியோம் புன்மை 
தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை 
எல்லோம் அறியோமே!

சித்தம் அழகியார் 
பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் 
நமக்கேலோர் எம்பாவாய்....

Padal 3 :

Muthaann Vennakaiyaay 
Munvandhu Ethirezundhen
Aththan Anandhan
amudhanendra ulliruthu

Thithikka pesuvai
Vandhun kadai thiravai
Pathudaiyeer Eesan
Pazha adiyeer Pangudaiyeer!

Puthadiyom punmai
Theerthaat kondaar pollathe
Ethttho nin anbudaimai
Ellam Ariyome!

Sitham azhagiyaar 
paadamo Nam Sivanai
Iththanaiyum Vendum
Namakkelor Embaavai ...

பொருள்:

♫ முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே!

♫கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய்.

♫ ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.


♫வந்த தோழியர் அவளிடம், "அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம்", என்றனர்.

Meaning :

♫ “Hey lady, with pearl like teeth, You used to wake before us, And talk sweetly, Deep from your mind, That he is our father, He is the source of our happiness, And he is nectar in person, But now you are sleeping,  With not even opening the door”

♫ “ My dear friends devoted to god, Is it very bad, If you forgive me just once for now?”

♫ “Do not try to cheat us , our dear, What devotion and love you have, Do we not know all, Would not the ladies with beautiful mind,  Sing about our lord Shiva".

♫  "All this we should definitely hear and suffer, Oh dear lady”
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe