குடும்ப ஒற்றுமையை காக்கவும் சகோதரர்கள் நலம் காக்கவும், குடும்பம் பிரியாமல் கூட்டுக்குடும்பமாய் இருக்கவும் இந்த கணு வைத்தல் வழிபாடு செய்யப்படுகிறது. சிறு குழந்தைகளுடன் காரணத்தை கூறி வைக்கும் போது ஒற்றுமை பேணப்படுகிறது.
மேலும், கால்நடைகளுக்கு பொங்கல் வைப்பது போன்று, பொங்கல் பண்டிகையையொட்டி, கணு வைப்பதால், காக்கா, குருவி போன்ற பறவைகளுக்கு உணவு படைக்கப்படுகிறது. இப்படி பாட்டுப் பாடி, காகங்களுக்கு கணுப்பிடி வைத்து, சகோதரன் நலத்துடன் வாழணும்; குடும்பங்கள் ஒற்றுமையுடன் வாழணும் என சகோதரிகள் வேண்டிக் கொள்ளும் 'பாசமலர்' பண்டிகை தான் கணுப்பண்டிகை.
கணு வைக்கும் முன்பு வயதில் மூத்த ஸ்த்ரீகள் சிறிய ஸ்த்ரீகளுக்கு இந்த மந்த்ரம் சொல்லி பச்சை மஞ்சள் கிழங்கால் நெற்றியில் கீறி விடுவர்.
தாயோடும் தந்தையோடும்
சீறோடும் சிறப்போடும்
ஊரோடும் உறவோடும்
காக்காய் கூட்டம் போல்
கலையாமல் நீடூழி வாழணும்.
காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு பிடித்த இடத்திற்கு செல்வது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும் என்பதே கதை
ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ, மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும்.
முதல் நாள் பொங்கிய சாத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து, சக்கரைப் பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும், குருவிக்கும் படையல் வைக்க வேண்டும்
’காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம். கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்’ என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும்.
கணுப்பிடி நைவேத்ய மந்திரம்:
கணுப்பிடி வைத்தேன்
காக்காய் பிடி வைத்தேன்...
கணுப்பிடியும் காக்கைப்பிடியும்
கலந்து நானும் வைத்தேன்...
பார்த்து வைச்சேன் பரப்பி வைத்தேன்
பச்சை இலையில் நிரப்பி வைத்தேன்...
மஞ்சள் இலையில் விரிச்சி வைத்தேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சி வைத்தேன்...
காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வைத்தேன்...
கலர்கலரான சாதம் வைத்தேன்
கரும்புத் துண்டும் கலந்து வைத்தேன்...
வகைவகையா சாதம் வைத்தேன்
வாழைப்பழம் சேர்த்து வைத்தேன்...
அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமோகமாக வாழ அழகாய் வைத்தேன்...
கூட்டுப்பொரியல் வைத்தேன்
கூட்டுக் குடும்பமாய் வாழ வைத்தேன்...
தூப தீபம் காட்டி வைத்தேன்
கற்பூரம் ஏற்றி வைத்தேன்
கடவுளை வணங்கி வைத்தேன்...
ஆரத்தி எடுத்து வைத்தேன்
ஆண்டவனை வேண்டி வைத்தேன்...
காக்கைக் கூட்டம் போல எங்கள்
குடும்பம் பிரியாதிருக்க
கணுப் பிடி வைத்தேன்...
காக்காய் கூட்டம் கலைந்தாலும்
என் குடும்ப கூட்டம் கலையாமல் இருக்கணும்.
Useful for today's modern families
Atleast after seeing this they know the story of kanupidi