உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!" என்று அவள் பெருமைப்படுகிறாள்.
குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.
Ragam: Sri Talam: Adi
மாயனை மன்னு
வடமதுரை மைந்தனை
தூய பெருநீர்
யமுனைத் துறைவனை!
ஆயர் குலத்தினில்
தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம்
செய்த தாமோதரனை!
தூயோமாய் வந்து நாம்
தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க!
போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்
செப்பேலோர் எம்பாவாய்...
Pasuram #5:
Maayanai mannu
vada madhurai maindhanai(th)
thooya peru neer
thooya peru neer
yamunai(th) thuraivanai !
Aayar kulaththinil
thonrum ani vilakkai(th)
thaayai(k) kudal vilakkam
thaayai(k) kudal vilakkam
seydha dhaamodharanai(th) !
Thooyomaay vandhu naam
thoomalar thoovi(th) thozhudhu
vaayinaal paadi
vaayinaal paadi
manaththinaal sindhikka(p) !
Poya pizhaiyum
pugudharuvaan ninranavum
theeyinil thoosaagum
theeyinil thoosaagum
cheppelor embaavaay...
பொருள்:
✬ வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம்.
✬ அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
✬ Lord of wondrous deeds, prince of Mathura, abiding in the banks of the pure Yamuna river, the sacred light that took birth in the shepherd's community, who by your very birth glorified the womb of mother Yasoda, whose belly was tied with a string (damodara).
✬ To You we come with a pure heart and worship by offering flowers, singing your praise, thinking about your wholeheartedly.
✬ Such worship shall burn our past sins and the ones to be committed in future much the same way cotton burns when it comes in contact with fire.