ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை.

எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும்.

இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல!

எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான்.  அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.
Ragam: Varali
Talam: Adi

பாசுரம் #4:
ஆழிமழைக் கண்ணா 
ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு 
முகந்துகொடு ஆர்த்தேறி !

ஊழி முதல்வன் 
உருவம் போல்மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் 
பற்பனாபன் கையில்!

ஆழிபோல் மின்னி 
வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க 
முதைத்த சரமழைபோல் !

வாழ உலகினில் 
பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட 
மகிழ்ந்தேலோர் எம்பாவாய்....


Pasuram #4:
Aazhi Mazhaik kanna 
ondru nee kai karavel
Aazhi ullpukku
mugandhu kodaarththeri !

Oozhi mudalvan
uruvam pol mey karuthu
Paazhiyan tholudaip
padmanabhan kaiyyil !

Aazhi pol minni
valampuri pol nindr adhirndhu
Thazhadhe sarngam
udiatha saramazhaip pol

Vazha ulaginil
peydhidaay nangalum
Margazhi neerada
magizhndelor empavai...

பொருள்:

✬ மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. 
✬ கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! 

✬ அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

Meaning :

✬ Continuing the prayers that she commenced, Andal in this fourth verse, refers to the Lord as the master of all the rain that falls on this earth. 

✬ She picturises the Lord as going deep into the ocean, taking the water and rising high in the sky to deposit it in the magnificent black clouds to eventually precipitate into rain. 

✬ The Lord’s dark colour, his mighty and handsome shoulders are compared to the clouds, the sound of thunder to the sounds from His Conch (Valampuri), the lightning to the shine on the Lord’s Disc (Aazhi – Chakra) and the plentiful rain compared to the stream of arrows issuing out of the Lord’s Bow (Sarngam). 

✬ Timely and adequate rain is referred to as the precursor of many gains and prosperity and the Lord Padmanabha as the master of that phenomena is offered prayers seeking that bountiful rain for the welfare of the devotees and all beings on earth.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe