Slokas4kids - Tiruvempavai #6

இறைவனை தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வணங்க வேண்டும் என்பதை பாடல் அடிகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளை விட செயலே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் இப்பாடல் சொல்கிறது. 

ஒன்றைச் சொல்லிவிட்டால், அதைச் செய்தே தீர வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி தலைகுனிய நேரிடும் என்பதும் இப்பாடல் உணர்த்தும் தத்துவம்.
   Audio for Tiruvempavai #6   

Ragam : Kamas 
Talam:  Adi


பாடல் #6:

மானே நீ நென்னலை
நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன்
என்றலும் நாணாமே !

போன திசை பகராய்
இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே
பிறவே அறிவரியான் !

தானே வந்து எம்மைத்
தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி
வந்தோர்க்கு உன் வாய் திறவாய் !

ஊனே உருகாய் 
உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் 
பாடேலோர் எம்பாவாய் ...

Padal #6 :

MAnE nI nennalai
NaLai vandh uNgaLai
nAnE ezuppuvan
enRalum nANAmE !

pOna dhichaipagarAy
innam pularndhinRO
vAnE nilanE
piRavE aRivariyAn !

thAnE vandhemmaith
thalaiyaLith thAtkoNdaruLum
vAnvAr kazalpAdi
vandhOrkkun vAythiRavAy !

UnE urugAy
unakkE uRum emakkum
EnOrkkum thaNkOnaip
pAdElOr empAvAy...

பொருள்:
♫ மான் போன்ற நடையை உடையவளே!

♫ நேற்று நீ எங்களிடம், உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. 

♫ உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? 

♫ வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். 

♫ அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

Meaning :

♫ Oh deer ! You told yesterday that you yourself would come and wake us up the next day. 

♫ But where did you go (today)? Are you not ashamed? Is it not yet dawn? 

♫ The One who is difficult to be understood by the space, earth and others, His coming by Himself to own us making us superior, singing that sky-like Great feet we have come. 

♫ Reply to us. Oh flesh, melt! Let us sing the King of you, us and others.
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe