இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம்.

108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும்.

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Ragam: Nattai        Talam: Adi

பாசுரம் #1:

மார்கழித் திங்கள் 
மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் 
போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி 
செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் 
நந்தகோபன் குமரன்!

ஏரார்ந்த கண்ணி 
யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் 
கதிர்மதியம் போல் முகத்தான்!

நாராயணனே 
நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் 
படிந்தேலோர் எம்பாவாய்...


Pasuram #1 :

Margazhi thingal
Madhi Niraindha Nannalal!
Neerada podhuvir,
Podhu mino Nerizhaiyeer!

Seermalgum aayppadich
Chelva chirumeergAal!
Koorvel kodunthozhilan
Nandagopan Kumaran!

Erarndha kanni
Yasodhai ilan singam !
Karmeni chengan
Kadir madiyam pol mugathan!

Narayanane
Namakke parai tharuvan!
Paror pugazhap
Padinthelor Empavaai...



பொருள்:

✤  அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே!

✤  சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம்.

✤  கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான்.

✤  அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

Meaning :

✤ This first verse sets the time as the first day of the month of Margazhi (When Sri Andal sung this verse that was probably a full moon day).

✤ Andal invites the young girls of the prosperous Ayarpadi and everyone to symbolically bathe and join in the excellent and exemplary worship of Lord Narayana who will bless us and give us success.

✤ In this verse the Lord is referenced as Krishna, the son of Nandagopan (who is ever vigilant with a sharp spear to protect the baby Krishna), the lion cub like son of the beautiful eyed Yashoda, the Lord who is dark, and whose face is radiant like the sun.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe