ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.
Ragam: Gowlai Talam: Adi
வையத்து வாழ்வீர்காள்!
நாமும் நம் பாவைக்குச்
நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள்
கேளீரோ பாற்கடலுள் !
கேளீரோ பாற்கடலுள் !
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் !
நாட்காலே நீராடி
நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம்
மலரிட்டு நாம் முடியோம் !
மலரிட்டு நாம் முடியோம் !
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்றோதோம்!
ஐயமும் பிச்சையும்
ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி
உகந்தேலோர் எம்பாவாய்...
உகந்தேலோர் எம்பாவாய்...
Pasuram 2 :
Vaiyathu Vazhveerkal !
Namum nam pavaikku
Seyyum kireesaikal
Keleero! Paarkadalull
Paiyya thuyindra
Paiyya thuyindra
paraman adi paadi
Neyy unnom paal unnom
Neyy unnom paal unnom
Naatkale Neeradi!
Maiyittezhudom
malar ittu naam mudiyom!
Seyyadana seyyom
Seyyadana seyyom
Theekkuralai Sendrodhom!
Iyamum pichaiyum
Iyamum pichaiyum
aandanaiyum kai kaatti
Uyyumarenni Ugandhelor Empavai...
Uyyumarenni Ugandhelor Empavai...
பொருள்:
✤ திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே!
✤ நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள்.
✤ நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும்.
✤ கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்).
✤ தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது.
✤ இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

Meaning :
✤ In this second verse Sri Andal enumerates the dos and don’ts for the month long Nonbu (intense worship) that she is setting out to do with an invitation to everyone to join in.
✤ We will sing the praise of the feet of the Lord who is sleeping gently on the serpent in the middle of the wide ocean.
✤ We will wake up early and bathe, we will not adorn ourselves with kajal and flowers, we will not eat Ghee and milk, we will not do inappropriate deeds, will not speak evil and and harmful words, we will do charity and righteous deeds.
✤ Think noble thoughts and work to attain salvation and unification with the Lord.
✤ The reference to not eating and not adorning is an advice to change the focus from the self and enjoyment of worldly pleasures to increasing the focus intensely on God and godly matters. When intensity of one activity increases the intensity and time on other activities automatically decreases. Conversely when we make the choice to eschew some activities, we automatically create the time and inclination for other activities.