பூதங்கள் தோறும் நின்றாய்  

Slokas4kids.blogspot.com - Tiruppalliezhuchi #5

போக்கிலன் வரவிலன் என்று சிவபெருமான் போற்றப்படுகிறார். அதாவது, இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன் என்று இதற்குப் பொருள். 

அவன் நிரந்தரமானவன், அவனுடைய மூலத்தை அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் அறிவீனர்களாகவே இருக்க முடியும். எத்தனை நூல்களை ஆய்வு செய்தாலும், இதைக் கண்டு பிடிக்க முடியாது. 

எனவே, நம் சக்திக்கு மீறிய அந்த பரமனைப் பாடி மகிழ்ந்தாலே அவன் நம் கண்ணுக்குத் தெரிந்து விடுவான் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.


  Audio for Tiruppalliezhuchi #5  
Ragam : Malayamarutham
Talam  : Adi


பாடல்  5:
பூதங்கள் தோறும் நின்றாய் 
எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் 
என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் 
ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் 
உனைக்கண்டறிவாரை

சீதங்கொள் வயல் 
திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! 
எங்கள் முன்வந்து

ஏதங்களறுத்து 
எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் 
பள்ளி எழுந்தருளாயே.

Padal 5:

pUdhaNga dORunin RAy 
enin allAl
pOkkilan varavilan 
enaninaip pulavOr

gIdhaNgaL pAdudhal 
Adudhal allAl
kEttaRi yOm unaik 
kaNdaRi vAraich

chIdhaNkoL vayal
thirup perunthuRai mannA
chindhanaik kum 
ari yAyeNgaN munvandhu

EdhaNgaL aRuththemmai 
ANdaruL puriyum
emperu mAnpaLLi 
ezundharu LAyE...

பொருள்:
✸ குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே!

✸ நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள்.

✸ இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை.

✸ அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக.

Meaning :
✸ "You are present in all the Elements. One without out or in going", thus, about You, the poets praise singing and dancing, other than that we never heard anybody who saw and realised You !
✸ Oh the King of thirupperunthuRai of cool fields ! Oh Difficult even to think ! My Lord coming in front of our eye, cutting off our miseries, blessing ruling us ! Bless getting up !!


* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe