பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான்.
தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது.
உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான்.
அவன் தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார்.
பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா!
இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
Ragam : Behag Talam : Adi
பாசுரம் 25:
ஒருத்தி மகனாய் பிறந்து
ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளிந்து
ஒருத்தி மகனாய் பிறந்து
ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளிந்து
வளர
தரிக்கிலானாகித்
தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற
நெடுமாலே!
உன்னை அருத்தித்து வந்தோம்
பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும்
சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து
மகிழ்ந்தேலோர் எம்பாவாய்...
தரிக்கிலானாகித்
தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற
நெடுமாலே!
உன்னை அருத்தித்து வந்தோம்
பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும்
சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து
மகிழ்ந்தேலோர் எம்பாவாய்...
Pasuram 25:
oruththi maganaay(p) piRandhu
Or iravil
oruththi maganaay
oLiththu vaLara(th)
tharikkilaan aagi(th)
thaan theengu ninaindha
karuththai(p) pizhaippiththu(k)
karuththai(p) pizhaippiththu(k)
kanchan vayitril
neruppenna ninRa
nedumaalE!,
unnai aruththiththu
vandhOm paRai
tharudhiyaagil
thiruththakka selvamum
sEvagamum yaam paadi
varuththamum theerndhu
varuththamum theerndhu
magizhndhElOr embaavaay ...
பொருள்:
✸ தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே!
✸ அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே!
✸ உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம்.
✸ உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்

Meaning :
✸Oh Lord, who was born to a mother (Devaki) and within the night period was taken up as a foster son by another mother(Yasoda), who destroyed the plans of Kamsa to kill you and who was like a burning fire in his stomach, we have come requesting you with our wish list of things.
✸ If you can satisfy our vow, we would sing your limitless wealth and your bravery and overcome the grief caused by Your separation and rejoice.