விண்ணகத் தேவரும்
Audio for Tiruppalliezhuchi #9
Ragam : Malayamarutham
Talam : Adi
பாடல் 9:
விண்ணகத் தேவரும்
விண்ணகத் தேவரும்
நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே!
விழுப்பொருளே!
உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து
வாழச் செய்தானே!
வண் திருப்பெருந்துறையாய்!
வண் திருப்பெருந்துறையாய்!
வழியடியோம்
கண்ணகத்தே நின்று
களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே!
கடலமுதே! கரும்பே!
விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்!
உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான்
பள்ளி எழுந்தருளாயே!
Padal 9:
viNNakath thEvarum
naNNavum mAttA
vizupporu LEuna
thozuppadi yONgaL
maNNagath thEvandhu
vAzachchey dhAnE
vaNthirup perunthuRai
yAyvazi adiyOm
kaNNagath thEninRu
kaLitharu thEnE
kadalamu dhEkarum
bEvirum badiyAr
eNNagath thAy
ula gukkuyi rAnAy
emperu mAnpaLLi
ezundharu LAyE...
பொருள்:
✸ விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே!
✸ உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே!
✸ பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே!
✸ உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.
Meaning :

✸ Oh Great thing unreachable even for the dhEvAs of the space ! Oh the One who made us, Your humble slaves, live coming on this earth ! Oh the One in ThirupperunthuRai !
✸ Oh the One standing giving joy in the eyes of us, traditional slaves ! Oh the Nectar from the ocean!
✸ Oh Sugar(cane) ! The One residing in the thoughts of liking slaves ! The Soul of the world ! My Lord, Bless getting up !!
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.