திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள்.
மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள்.
அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார்.
திருப்பாவை பாடுபவர்கள் தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
Ragam : Kalyani Talam : Kanda chapu
பாசுரம் 17
அம்பரமே தண்ணீரே
சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா!
எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம்
கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்!
அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து
ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே!
உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா!
பலதேவா!
உம்பியும் நீயும்
உறங்கலோர் எம்பாவாய்.
Pasuram 17:
ambaramE thaNNeerE
sORE aRam seyyum
emberumaan nandhagOpaalaa
ezhundhiraay!
kombanaarkku ellaam
kozhundhE kula viLakkE
emberumaatti yasOdhaay
aRivuRaay!
ambaram ooda aRuththu
Ongi ulagu aLandha
umbar kOmaanE
uRangaadhu ezhundhiraay!
sem poR kazhaladi(ch)
chelvaa baladhEvaa
umbiyum neeyun
uRangElOr embaavaay ...
பொருள்:
✸ ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே!
✸ தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே!
✸ மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும்.
✸ விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும்.
✸ செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.
Meaning :
Oh King Nandagopa, reputed in charity for who donates many clothes, abundant water and large quantity of food, please wake up.
Oh queen Yashodha, who is the head of our ladies group, who shines like a light among our cow-herd community, whom I adore, please wake up.
Oh Lord, who took a gigantic form and pierced the space to scale all the worlds, please wake up Oh Lord Balarama, whose feet are adorned by anklets made of gold, please wake up along with your younger brother.