இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை போற்றிப் பாசுரம் என்பர். 

இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 

இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

Slokas4kids.blogspot.com - Tiruppavai 24

Ragam : Sindhubhairavi
Talam : Adi
பாசுரம் 24:

அன்று இவ்வுலகம் 
அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை 
செற்றாய் திறல்போற்றி!

கொன்றச்சகடம் 
உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று குணிலா 
எறிந்தாய் கழல் போற்றி!

குன்று குடையாய் 
எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகைகெடுக்கும் 
நின்கையில் வேல் போற்றி!

என்றென்றுன் சேவகமே 
ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் 
இரங்கேலோர் எம்பாவாய்..

Pasuram 24:
anRu iv ulagam 
aLandhaay adi pOtri !
senRangu(th) then ilangai 
setraay thiRal pOtri !

ponRa(ch) chakatam 
udhaiththaay pugazh pOtri !
kanRu kuNilaa
veRindhaay kazhal pOtri !

kunRu kudaiyaay 
eduththaay guNam pOtri !
venRu pagai kedukkum 
nin kaiyil vEl pOtri !

enRenRum un sEvagamE 
Eththi(p) paRai koLvaan 
inRu yaam vandhOm 
irangElOr embaavaay...

பொருள்:
✸ மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். 
✸ ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.
✸ கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். 
✸ கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.
✸ பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். 
✸ உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.


Meaning :
✸ We praise the feet of the Lord who scaled the world by his two steps (Vaamana Avatar).
✸ We praise the power of the Lord who travelled, located Ravana and destroyed the beautiful SriLanka.
✸ We praise the fame of the Lord who kicked and destroyed Sadakasura (who came in the form of a chakra). We praise the pose of your feet which climbed on top of Vatsasura (who had assumed the form of a calf).
✸ We praise your virtues of Lord who lifted the Govardana mountain as an umbrella. We praise the spear on your hand which destroys your enemies.
✸ Please bless us as we have come to your place singing your glories.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe