Slokas4kids.blogspot.com - Tiruvempavai 19

அக்காலத்தில், பெண்கள் எத்தகைய மணவாளன் தங்களுக்கு அமைய வேண்டும் என்று கேட்கும் உரிமை இருந்திருக்கிறது. அதனால் தான் ஒரு பக்தன் தங்களுக்கு கணவனாக வேண்டும் என்றார்கள். 

அது மட்டுமல்ல! நல்ல கணவன் அமைந்து விட்டால், கிரகங்களின் மாற்றம் கூட ஏதும் செய்யாது என்று உறுதியாகச் சொல் கிறார்கள். 

இறைவனை உறுதியாக நம்புவோருக்கு கிரகங்களின் தாக்கம் இல்லை என்பது இப்பாடல் உணர்த்தும் உட்கருத்து.

 Audio 
 Ragam : Vasantha 
 Talam  : Adi 

பாடல்  19:
உங்கையிற் பிள்ளை உனக்கே 
அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் 
புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் 
உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் 
அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது 
எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் 
மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு 
எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு
எமக்கேலோர் எம்பாவாய்.

Padal 19:

uNkaiyiR piLLai unakkE 
adaikkalam enRu aNgap 
pazanychoR pudhukkum 

em achchaththAl 
eNgaL perumAn 
unakkon RuraippOmkEL 
eNkoNgai nin 
anbar allArthOL chEraRka 

eNkai unakkallA 
dheppaNiyuny cheyyaRka 
kaNgulpagal eNkaN 
maRRonRuNkANaRka 

iNgip parichE emakkeNkOn 
nalgudhiyEl eNgezilen 
nyAyiRu emakkElOr empAvAy...

பொருள்:

♫ உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி இருக்கிறது.

♫அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன் னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம்.

♫ எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும்.

♫ எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது.

♫ இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன?

Meaning :

♫ "The child in your hand is your own refugee", because of our fear of that adage coming to existence, our Lord, we tell you something, listen !

♫ Let our breast not join the shoulder of somebody who is not Your lover; Let my hand not do any service other than for You; Night or day let my eye not see anything else.

♫ If You, my Lord, give us this gift, let the Sun rise wherever, what is our problem?
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe