Slokas4kids.blogspot.com - Tiruvempavai 18


 இறைப் படைப்பில் எதுவுமே கேலிக்குரியதல்ல. எல்லாம் அவன் செயல். எல்லா உயிர்களையும் பரம்பொருளாகக் காண வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.
   Audio   
   Ragam : Sama    |    Talam : Adi   



பாடல்  18:
அண்ணாமலையான் 
அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் 
மணித்தொகை வீறற்றாற் போல்

கண்ணார் இரவி 
கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் 
தாரகைகள் தாமகல

பெண்ணாகி ஆணாய் 
அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி 
இத்தனையும் வேறாகி

கண்ணா ரமுதமாய் 
நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் 
பாய்ந்தாடலோர் எம்பாவாய்...

Padal 18:
aNNA malaiyAn 
adikkamalam chenRiRainychum 
viNNOr mudiyin 
maNiththokai vIRaRRArpOl 

kaNNAr iravi kadhirvandhu 
kArkarappath thaNNAr 
oLimazuNgith thArakaikaL 
thAmakalap peNNAgi ANAy

 aliyAyp piRaNgoLichEr 
viNNAgi maNNAgi 
iththanaiyum vERAgik 
kaNNAr amudhamumAy 

ninRAn kazalpAdip 
peNNEip pUmpunalp
Ayndhu AdElOr empAvAy...
பொருள்:

♫ சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன.

♫ பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார்.

♫கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.

Meaning :

♫ As the heaps of precious gems on the crowns of the celestial powers lose their radiance, when they go to salute the feet lotuses of the Lord of aNNAmalai, the stars fade away with their cold luminance when the one in the eye - Sun comes to remove the darkness.

♫ Being female, male, neuter, rays filled sky, earth and Being apart from all these, One who stands as the nectar for the eyes, singing His ornated foot, Oh girl, bathe in this floral stream. 
* Audio courtesy by Smt. Shivaranjani Panchapakesan.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe