14.03.2022 - திங்கள் கிழமை
இரவு 8:15 - 9:15 க்குள் அனுஷ்டிக்க வேணும்.
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர்.
இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.
கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.
⚜ காரடையான் நோன்பு உருவான கதை
மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார்.
பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி.
மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள்.
கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.
அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.
சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார்.
சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார்.
அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.
இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார்.
சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும்.
ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள்.
சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார்.
எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே!
அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி.
எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். ஆகையால் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக இந்த நோன்பை கடை பிடித்து பயன்பெறுவோமாக!
மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.
⚜ விரதமுறை:
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, தரையில் சிறிய கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும்.
இலையின் ஓரத்தில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும்.
அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.
அதன் முன் அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும்.
பின்னர் நோன்பு சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும்.
இறைவியர் படங்களுக்குச் சாற்ற வேண்டும்.
பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் அடை செய்வார்கள். இந்த பிரசாதத்தை அனைவரும் உண்ணலாம். காரடையான் நோன்பன்று பெண்கள் மோர் சாப்பிடக் கூடாது.
மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது
சொல்ல வேண்டிய ஸ்லோகம்
The following is the Tamil chant while doing Neivedyam.
"Urukaadha Venneyum oradaiyam Notru
unakku naan Vaithen
Orukkalum en kanavar
Ennai vittu pririyadhirukka Vendum"
"உருகாத வெண்ணெயும் ,
ஓர் அடையும் நோற்று
உனக்கு நான் வைத்தேன்,
எந்நாளும் என் கணவர்
எனை விட்டு பிரியாதிருக்க வேண்டும் "
என்று அம்மனை நோக்கி வேண்டி நமஸ்கரிக்கவும்.
Meaning :
I offer butter and the rice made out of Kaar Arisi. Bless me that I live happily with my husband for long.
While tying the rope, recite the following sloka :
दोरं गृह्णामि सुभगे
सहारिद्रम् धराम्यहम् |
भर्थु: आयुश् सिद्ध्यर्थं
सुप्रीता भव सर्वदा ||
Doraṁ Gṛhṇāmi Subhage
Sahāridram Dharāmyaham |
Bharthu: āyuś Siddhyarthaṁ
Suprītā Bhava Sarvadā ||
தோ³ரம்ʼ க்³ருʼஹ்ணாமி ஸுபகே³
ஸஹாரித்³ரம் தராம்யஹம் |
பர்து²: ஆயுஸ்² ஸித்³த்யர்த²ம்ʼ
ஸுப்ரீதா பவ ஸர்வதா³ ||
Meaning :
Devi, I am tying this nombu saradu around my neck for the longevity of my husband (Father for unmarried girls). Please bless me.
⚜ பலன்:
காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.
பாடல் : காமாக்ஷி பங்காரு காமாக்ஷி
Audio
ராகம் : வராளி
தாளம் : மிஸ்ரா சாபு
இயற்றியவர் : ஷ்யாமா சாஸ்திரி
பல்லவி
காமாக்ஷி பங்காரு காமாக்ஷி
நன்னு ப்ரோவவே
அனுபல்லவி
தாமஸ(மே)ல ராவே
ஸாம கான லோலே ஸுஸீலே (காமாக்ஷி)
சரணம்
ஸ்யாம க்ருஷ்ண பரிபாலினீ ஸுக
ஸ்யாமளே ஸிவ ஸங்கரீ
ஸூலினீ ஸதா-ஸிவுனிகி ராணீ
விஸா(லா)க்ஷ தருணீ
ஸாஸ்வத ரூபிணீ (காமாக்ஷி)
ஸ்வர ஸாஹித்ய
நா மனவினி வினு தே3வீ
நீவே கதி(ய)னி நம்மினானு
மா(ய)ம்மா வேகமே கருண ஜூ(டவ)ம்மா
பங்காரு பொம்மா (காமாக்ஷி)
பொருள் :
காமாட்சீ! பங்காரு காமாட்சீ!
சாம கானத்தினை விரும்புபவளே! நல்லியல்பினளே!
மன்மதனை எரித்தோனுக்குப் பிரியமான இல்லாளே! விரும்பியது அருள்பவளே! கல்யாணீ! காமாட்சீ! தாமரையிதழ் நிகர், நீண்ட கண்களினளே! முக்கோணத்தில் உறைபவளே! கருணை வடிவினளே!
புனிதமானவளே! மிருதுவான சொல்லினளே! தொண்டர்களைக் காப்பவளே! பிறவியிலிருந்து மீட்பவளே! பொன்னங்கத்தினளே! பனிமலை மகளே! மகேசுவரியே! ஹ்ரீம்-கார வடிவினளே!
சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! கிளியேந்தும் சியாமளையே! சிவ சங்கரீ! சூலமேந்துபவளே! சதாசிவனின் ராணியே! அகன்ற கண்களோனின் இல்லாளே! அழியாத உருவினளே!
தேவீ! எமது தாயே! என்னைக் காப்பாயம்மா. நீயே கதியென நம்பியுள்ளேன். தாமதம் ஏன்? வாராயம்மா.
எனது வேண்டுகோளைக் கேளாய். வேகமாக கருணை புரிவாயம்மா. என்னைக் காப்பாயம்மா.