ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (156)

விளக்கம்: 
தீங்கு செய்தவர்களைத் தண்டித்தவர்களுக்கு அனறு ஒரு நாளே இன்பம் ; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும்வரை புகழ் உண்டு.

கதை :
குழந்தைகளே! நாம் எப்போதும் கடவுள் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை என்றும் கைவிடக்கூடாது. நமது வாழ்வில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் இறைவன் நமது கோரிக்கைக்கு கண்டிப்பாக ஒருநாள் செவி சாய்ப்பார். அதைப்பற்றி இக்கதையில் காண்போம்.

பொறுமை கடலினும் மானப் பெரிது என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.

Moral story - Slokas4kids.blogspot.com

பிரகாஷ் மிகவும் திறமைசாலி. மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர். ஒருநாள்  Five Star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றிருந்தார். Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தார்.

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் அவர் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள்.

தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள்.

பிரகாஷுக்கு  இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார்.

பிரகாஷால் இதைக் கண்டு  பொறுக்க முடியவில்லை. Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று waiter ஐ கூப்பிட்டார்.  Waiter அமைதியாக பிரகாஷிடம் கூறினார், "Sir! உங்களுடைய order எங்களுக்கு Very special. அதை எங்கள் Chief Chef, அவரே தயாரித்துக்  கொண்டிருக்கிறார். அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது."

இதைக்கேட்ட பிரகாஷ் அமைதி ஆனார். பொறுமையுடன் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் அவரது  உணவு வந்தது. அதை 6 பேர் அவருக்கு பறிமாறினார்கள். அவருக்கு பறிமாறப்பட்ட உணவு அனைத்துமே அவர் order கொடுக்காத Very rich food ஆக இருந்தது. பிரகாஷுக்கு ஒன்றும் புரியவில்லை.

பிரகாஷ்  ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் அவரைப்  பார்த்து விட்டார்.
அவர் பிரகாஷின் பள்ளி நண்பர். பிரகாஷுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க எண்ணினார். ஆகையால் அவருக்கு ராஜபோக விருந்தளிக்க தனது சமையல்காரருக்கு உத்தரவிட்டார்.

He wanted to surprise him. He changed his simple meal to a rich one and instructed the kitchen to give him a Royal treat.

பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக  பேசிக் கொண்டார்கள்.

அது தான் வாழ்க்கை.

சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.

உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.

Don't worry. The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று நம்மை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை Chief chef ஆகிய கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.

பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.

Believe in The God.  நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe