நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது.
நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கையாக பிரம்மசாரிணி தேவியை வணங்கப்படுகிறது.
பிரம்மசாரிணி
‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை வழிபடுகிறர்கள். அவைகளில் ஒரு அம்சம் பிரம்மசாரிணி என்பதாகும்.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூஜை விழாவில் இரண்டாம் நாள் இரவு பூஜிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்.
இந்த தேவி எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருப்பாள். வெண்ணிற ஆடையுடன், வலக்கையில் ஜெபமாலையையும் இடக்கையில் கமண்டலத்தையும் ஏந்திக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை.
சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார் என்பது புராணக் கதை.
அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பொறுமையைத் தர வல்லவள். அதோடு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவர். இந்த தேவியை வழிபட மனதில் உறுதி பிறக்கும்; எதையும் சாதிக்கும் திறன் கிட்டும்.
பிரம்மசாரிணி துர்க்கைக்கு கன்னியாகுமரியில் கோயில் உள்ளது..
நவராத்திரி நாத சமர்ப்பணம்
Audio
பாடல் : நதஜன பாலினி
ராகம் : நளினகாந்தி
தாளம் : ஆதி
இயற்றியவர் : தஞ்சை ஸ்ரீ சங்கர ஐயர்
பல்லவி
நதஜன பாலினி நளின காந்தி
நவரஸ கலா ரஸிகே அம்பிகே
அனுபல்லவி
மதமத்த கஜகாமினி ஷிவே
மாமவ சததம் ஜனனி மாயே
சரணம்
பரம க்ருபாகரி பக்த மனோகரி
பங்கஜ நேத்ரி பரம பவித்ரி
மரகத வர்ண ஸ்ரீபரமேஸ்வரி
மாதுர்ய வாக்விலாஸினி சங்கரி