நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது.
நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளில் வணங்கப்படும் துர்க்கையாக சந்திரகாண்டா விளங்குகிறாள்.
சந்திரகாண்டா
இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘காண்டா’ என்றால் மணி என்று பொருள்.
சந்திர பிறை இவள் முன் நெற்றியில் மணி போல் இருப்பதால் இவளை 'சந்திர காண்டா' என அழைக்கின்றனர்.
இவள் மூன்று கண் கொண்டு பத்து கரங்களுடன் காட்சி தருபவள். இவளின் வாகனம் சிங்கம் ஆகும். இவளின் இரு கரங்கள் பக்தருக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன.
இவளின் பார்வை பக்தரின் துன்பத்தை போக்கி இன்பம் தர வல்லது. சந்திர காண்டா தேவி போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருபவள். அதனால் பக்தரின் துன்பத்தையும் விரைந்து தீர்த்து வைப்பாள்
இவள் உடல் சக்கரங்களில் 'மணிபூர' சக்ரத்தில் இருப்பவள்.
இவள் உடல் சக்கரங்களில் 'மணிபூர' சக்ரத்தில் இருப்பவள்.
நவராத்ரியின் மூன்றாம் நாள் யோக சாதனை செய்வோர் மணிபூரா சக்ரத்தை தேவியின் அருளோடு அடைவர். இதை அடைந்தோர் தெய்வீக சப்தத்தை கேட்பர். மணிபூர சக்ரத்தில் அவர்கள் சிறிது கவனமாக இருப்பர். அதனால் சந்திர காண்டா தேவியின் அருள் அவசியமாகும்.
அன்னையின் வாகனமாம் சிங்கத்தை போல் இவளை வழிபடுவோர் வீரம் பெறுவார்கள். இவளின் அருள் கிட்டினால் பாவம் அழியும். இவள் கரத்தில் உள்ள மணியின் ஓசை பக்தரை ரட்சிக்கும். இவள் சர்வ சுபிட்சத்தையும் தந்து அருள் செய்வாள் என்பது திண்ணம்.
அன்னையின் வாகனமாம் சிங்கத்தை போல் இவளை வழிபடுவோர் வீரம் பெறுவார்கள். இவளின் அருள் கிட்டினால் பாவம் அழியும். இவள் கரத்தில் உள்ள மணியின் ஓசை பக்தரை ரட்சிக்கும். இவள் சர்வ சுபிட்சத்தையும் தந்து அருள் செய்வாள் என்பது திண்ணம்.
இவளின் கோவில் சித்ரகந்த குல்லி, வாரணாசி, உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ளது.
நவராத்திரி நாத சமர்ப்பணம்

நவராத்திரி நாத சமர்ப்பணம்

பாடல் : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
Audio
ராகம் : பூர்ண சந்த்ரிகா
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துஸ்வாமி தீஷிதர்
பல்லவி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி த்ரிபுர ஸுந்தரி
ஸிவே பாஹி மாம் வரதே
அனுபல்லவி
நீரஜாஸனாதி பூஜித பரே
நிகில ஸம்ஸய ஹரண நிபுண-தரே
சரணம்
ஸௌரி விரிஞ்சாதி வினுத ஸகளே
ஸங்கர ப்ராண வல்லபே கமலே
நிரதிஸய ஸுக ப்ரதே நிஷ்களே
பூர்ண சந்த்ரிகா ஸீதலே விமலே
(மத்யம கால ஸாஹித்யம்)
பரமா த்வைத போதிதே லலிதே
ப்ரபஞ்சாதீத குரு குஹ மஹிதே
ஸுருசிர நவரத்ன பீடஸ்தே
ஸுக-தர ப்ரவ்ருத்தே ஸுமனஸ்தே