நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. 

நவராத்திரி விழாவின் 4ஆம் நாளான சதுர்த்தி தினத்தன்று ‘கூஷ்மாண்டா’ வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம்.

Slokas4kids.blogspot.com - Bangaru kamatchi

நவராத்திரி நாத சமர்ப்பணம்

பாடல் : காமாக்ஷி பங்காரு காமாக்ஷி

Audio 


ராகம் : வராளி 

தாளம் :  மிஸ்ரா சாபு 

இயற்றியவர் : ஷ்யாமா சாஸ்திரி   

பல்லவி 

காமாக்ஷி பங்காரு காமாக்ஷி

நன்னு ப்ரோவவே


அனுபல்லவி 

தாமஸ(மே)ல ராவே

ஸாம கான லோலே ஸுஸீலே (காமாக்ஷி)


சரணம் 

ஸ்யாம க்ருஷ்ண பரிபாலினீ ஸுக

ஸ்யாமளே ஸிவ ஸங்கரீ

ஸூலினீ ஸதா-ஸிவுனிகி ராணீ

விஸா(லா)க்ஷ தருணீ 

ஸாஸ்வத ரூபிணீ (காமாக்ஷி)


ஸ்வர ஸாஹித்ய

நா மனவினி வினு தே3வீ

நீவே கதி(ய)னி நம்மினானு

மா(ய)ம்மா வேகமே கருண ஜூ(டவ)ம்மா

பங்காரு பொம்மா (காமாக்ஷி)


பொருள் : 

காமாட்சீ! பங்காரு காமாட்சீ!

சாம கானத்தினை விரும்புபவளே! நல்லியல்பினளே!

மன்மதனை எரித்தோனுக்குப் பிரியமான இல்லாளே! விரும்பியது அருள்பவளே! கல்யாணீ! காமாட்சீ! தாமரையிதழ் நிகர், நீண்ட கண்களினளே! முக்கோணத்தில் உறைபவளே! கருணை வடிவினளே!

புனிதமானவளே! மிருதுவான சொல்லினளே! தொண்டர்களைக் காப்பவளே! பிறவியிலிருந்து மீட்பவளே! பொன்னங்கத்தினளே! பனிமலை மகளே! மகேசுவரியே! ஹ்ரீம்-கார வடிவினளே!

சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே! கிளியேந்தும் சியாமளையே! சிவ சங்கரீ! சூலமேந்துபவளே! சதாசிவனின் ராணியே! அகன்ற கண்களோனின் இல்லாளே! அழியாத உருவினளே!

தேவீ! எமது தாயே! என்னைக் காப்பாயம்மா. நீயே கதியென நம்பியுள்ளேன். தாமதம் ஏன்? வாராயம்மா.

எனது வேண்டுகோளைக் கேளாய். வேகமாக கருணை புரிவாயம்மா. என்னைக் காப்பாயம்மா.


கூஷ்மாண்டா

கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது. 

இதை சேர்த்தால் சிறிய வெப்பமான உருண்டையான உலகை பொருளாக கொள்ளலாம். இதனால் கூஷ்மாண்டா என்றால் உலகை படைத்தவள் என்ற பொருள் வரும். 

கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும். இவர் சூரியமண்டலத்தை இயக்குவதாகக் கூறப்படுகின்றது. 

slokas4kids.blogspot.com - Kushmanda

முன்னொரு காலம் பிரளயம் ஏற்பட்டு உலகெல்லாம் அழிந்து போயிற்று. எங்கும் இருள் சூழ்ந்தது. தேவி கூஷ்மாண்டா அப்போது சிரித்தாள். அதனால் இருள் விலகி ஒளி பிறந்தது என புராணங்கள் கூறுகின்றன. அதனால் இவளே படைப்பின் சக்தி என கூறுவர் .இவள் சூர்ய மண்டலத்தை இயக்குபவள் என்று கூறுவர்

இவள் அஷ்டபுஜம் (எட்டுகரம்) கொண்டவள். இவளின் வாகனம் சிம்மம் ஆகும். இந்த சிம்மம் தர்மத்தின் வடிவம் ஆகும். 

இவளின் எட்டுகரங்களில் முறையே பாசம், அங்குசம், வில், சூலம் இருக்கும். இவளின் எட்டாவது கரத்தில் கலசம் உண்டு. இக்கலசம் அஷ்ட சித்தியையும், நவ நிதியையும் பக்தர்களுக்கு தர வல்லது. 

வட மொழியில் கூஷ்மாண்டம் என்றால் 'பூசணிக்காய் ' என்று ஒரு பொருளும் உண்டு. பூசணிக்காய் போன்ற தியாகத்தால் அன்னை மகிழ்வதால் அவளுக்கு இப்பெயர் வந்தது என கூறுவர்.

உடல் சக்ரங்களில் இவள் 'அனாஹத ' சக்ரத்தில் இருப்பவள் . இந்நாளில் யோக சாதனை செய்வோர் இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவர். இதை அடைந்தோர் உடல் , மன வலிமை பெறுவர்.

கூஷ்மாண்டா தேவியின் அருள் பாவத்தை அழித்து, இன்பத்தை தர வல்லது.

கூஷ்மாண்டாவுக்கான கோவில்கள் : உத்தர பிரதேசம், கான்பூர் நகரில் உள்ள கதம்பூர்.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe