For English Click here ...

நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. 

நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளாம் பஞ்சமி அன்று 'ஸ்கந்த மாதா' என்று துர்க்கையை வழிபடுகின்றனர். ஸ்கந்த என்ற சொல் முருகனை குறிக்கும். 

மாதா என்றால் அன்னை. முருகனின் தாயாக இருப்பதால் ஸ்கந்த மாதா என்று இவளை கூறுவர். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பகையாக விளங்கிய தாரகாசுரனை (சூரபத்மனை) கொன்றவர் தேவசேனாபதியாகிய முருகன். அத்தகைய முருகனின் தாயான இவள் மிகவும் மதிக்கப் படுகிறாள்.

slokas4kids.blogspot.com - Lakshmi Devi

நவராத்திரி நாத சமர்ப்பணம்

பாடல் : ஹிரண்மயீம் லக்ஷ்மீம் 

Audio 


ராகம் : லலிதா
தாளம் : ரூபகம்
இயற்றியவர் : முத்துஸ்வாமி தீக்ஷிதர்


பல்லவி 

ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஸதா பஜாமி

ஹீன மானவாஸ்ரயம் த்யஜாமி

அனுபல்லவி 

சிர-தர ஸம்பத்ப்ரதாம்

க்ஷீராம்புதி தனயாம்

ஹரி வக்ஷ:ஸ்தலாலயாம்

ஹரிணீம் சரண கிஸலயாம்

கர கமல த்ருத குவலயாம்

மரகத மணி-மய வலயாம்

சரணம் 

ஸ்வேத த்வீப வாஸினீம்

ஸ்ரீ கமலா-அம்பிகாம் பராம்

பூத பவ்ய விலாஸினீம்

பூ-ஸுர பூஜிதாம் வராம்

மாதரம் அப்ஜ மாலினீம்

மாணிக்ய-ஆபரண தராம்


கீத வாத்ய வினோதினீம்

கிரிஜாம் தாம் இந்திராம்

ஸீத கிரண நிப வதனாம்

ஸ்ரித சிந்தாமணி ஸதனாம்

பீத வஸனாம் குரு குஹ -

மாதுல காந்தாம் லலிதாம்


ஸ்கந்த மாதா

இவள் நான்கு கரங்களை கொண்டவள். இரண்டு கரங்களில் தாமரை மலரை கொண்டவள். ஒரு கரம் பக்தருக்கு ஆசி வழங்கும். 

இவளின் மடியில் ஸ்கந்தன் குழந்தை வடிவாக ஆறுமுகத்தோடு காட்சி தருவான். அன்னையை சிங்கம் தாங்கி நிற்கும்.

✨ இவள் சில நேரங்களில் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக காட்சி தருவாள். அதனால் இவளை 'பத்மாசினி' என்றும் கூறுவர்.

slokas4kids.blogspot.com - Skandamatha


இவளின் வடிவம் பக்தரை மெய்மறக்க செய்யும். இவள் தூய்மையின் வடிவானவள். இவளை வணங்குவோர் மனமும், ஆத்மாவும் அமைதி பெறும். அவர்கள் தன்னுடைய துக்கங்களை மறப்பர். 

✨ வாழ்வில் இறை இன்பத்தை அனுபவிப்பர். இவளின் ஆசிகள் உண்மையான வேண்டுதல்களை நிறைவேற்றும். தன்னை நம்புவோரை இவள் என்றும் கைவிட மாட்டாள். இவளின் அருள் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர்.

✨ இந்நாளில் யோகிகள் 'விசுத்தி' சக்கரத்தை அடைவர். விசுத்தி என்றால் கலப்படம் இல்லாதது, தூய்மையானது என பொருள் வரும். இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவோரின் மனம் தூய்மையான கருத்துக்களால் நிறையும். 

✨ இவளை சரண் அடைந்தோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி விடும்.

✨ மற்ற எந்த தேவிகளுக்கும் இல்லாத சிறப்பு இவளுக்கு உண்டு. இவளை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகிறோம்.

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe