ஸ்ரீராமநாமமே ஜெயம்

 
அனுமன் கடல் கடந்து இலங்கைக்கு சென்று முதன் முதலாக சீதா தேவியை பார்த்து வரும் போதும் சரி, சஞ்சீவினி மூலிகைக்காக மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வரும் போதும் சரி, 


இராமனுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்க கைலாயத்திலிருந்து சிவ லிங்கத்தை எடுத்து வர சொன்ன போதும் சரி, இதையெல்லாம் செய்து முடிக்க முடியும் என பெரிதாக நம்பவில்லை. 



அனுமனின் சக்தி அவருக்கே தெரியாது என்பார்கள். ஆனால் இராமர் மீது கொண்டிருந்த பக்தி, அன்பின் காரணமாக தன்னால் முடியும் என அனைத்தையும் முடித்துக் காட்டியவர்.  

ராம நாமத்தைத் தன் பலமாகக்கொண்டு அதிவீர பராக்கிரமங்களைச் செய்தவர். சதா சர்வ காலமும் ராம நாமத்தை ஜெபித்துக்கொண்டும் ராம கதைகளைக் கேட்டுக்கொண்டும் இருப்பவர்.  "எங்கு ராமாயணமும் பாகவதமும் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் பிரசன்னமாகியிருப்பார்" என்பது நம்பிக்கை. இன்றும் உபந்யாசம் நடைபெறும் இடங்களில் அனுமனுக்கென்று ஒரு பலகை போடப்படுவது வழக்கம்.  

நாமும் அனுமனைப் போல் ராமபிரான் மீது பக்தி செலுத்தி, நம்மால் எல்லாம் முடியும் என முயற்சி செய்தால் எதையும் செய்து முடிக்கலாம்.

ஸ்ரீஹனுமத் ஜெயந்தி - 12/01/2021

💪 ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர்.   அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
  
🙌 சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. 

👶 வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

🙏 அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. 

புத்திர் பலம் யசோ தைர்யம் 
நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச 
ஹனூமத் ஸ்மரணாத் பவேத் ||
 
இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணர முடியும்.

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

 புத்திர் பலம் - அறிவில் வலிமை
 யசோ - புகழ்
 தைர்யம் - துணிவு
 நிர்பயத்வம் - பயமின்மை
 அரோகதா - நோயின்மை
 அஜாட்யம் - ஊக்கம்
 வாக் படுத்வம் - பேச்சு வலிமை
 ச - இவையெல்லாம்
 ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
 பவேத் - பிறக்கின்றன.
 அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

துளசிதாசர் பாடிய 'அனுமன் சாலிசா'  அனுமனின் பராக்கிரமங்களை விளக்கும். அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்ய மனபயம் நீங்கி தைர்யம் பிறக்கும். 

ராம நாமமு ஜென்ம ரக்ஷக மந்த்ரம், ஆம்! நம்மையெல்லாம் இந்த பிறவிப்பெருங்கடலிலிருந்து மீட்டெடுக்கும் ஒரே மந்திரம் ராம நாமமே ஆகும் என்கிறார் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள். ஆகையால் ஹனுமத் ஜெயந்தி அன்று ராமநாமத்தை ஜபித்து ராமபிரான் மற்றும் அஞ்சனை மைந்தனின் அருளை பெறுவோமாக! 
ஜெய் ஸ்ரீராம் !

3 Comments

Unknown said…
Hi vidya all
Margazhi kolam Thirupavai Thiruvempavai inspiring me and start my day after seeing kolam and slogam

Good effort doing this apart from your routine household work 🙏
Unknown said…
Hi vidya all
Margazhi kolam Thirupavai Thiruvempavai inspiring me and start my day after seeing kolam and slogam

Good effort doing this apart from your routine household work 🙏
Unknown said…
Hi vidya all
Margazhi kolam Thirupavai Thiruvempavai inspiring me and start my day after seeing kolam and slogam

Good effort doing this apart from your routine household work 🙏
Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe