முக்தி பெற்ற வேடன்!
ஒருமுறை வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் சிக்கவில்லை. அப்போது அங்கே ஒரு புலி வந்துவிட, அதற்கு பயந்து அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான்.
அந்த புலி அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்திலிருந்து கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடக்கூடாது என்ற பயத்தால் தூக்கம் வராமல் இருக்க அந்த மரத்தின் இலைகளை கீழே பறித்து போட்டுக் கொண்டே இருந்தான்.
மேலும், அன்றைய தினம் மஹாசிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் சிவபெருமானை கண் விழித்து பூஜித்த பலனையும் தன்னை அறியாமலேயே பெற்றான்.
அதன் காரணமாக, அந்த வேடனுக்கு முக்தி அளித்து மோக்ஷத்தை அருளினார் சிவபெருமான் என்கிறது புராணக்கதை.
ஆகவே நாமும் வில்வ இலைகளை கொண்டு சிவனை வணங்கி அவனருள் பெறுவோமாக!