நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. ‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது.
வட இந்தியாவில் நவராத்திரி தினங்களில் நவதுர்க்கைகளில் ஒவ்வொரு வரை ஒவ்வொரு நாளும் வழிபடுவது வழக்கமாக உள்ளது.
நவ துர்க்கைகள் - துர்க்கை அவதாரங்கள் :
1. சைலபுத்ரி
2. பிரம்மசாரிணி
3. சந்திர காண்டா
4. கூஷ்மாண்டா
5. ஸ்கந்த மாதா
6. காத்யாயனி
7. காளராத்திரி
8. மகாகௌரி
9. சித்திதாத்ரி
இப்படி 9 விதமான துர்க்கைகள் உள்ளனர்.
சைலபுத்ரி
துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.
ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்...
இவர்களை நவராத்திரி தினத்தில் வழிபட்டு அன்னையின் அருளை பெற்றிடுவோம்...
பாடல் : மாதங்கி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
Audio
ராகம் : ராமமனோஹரி
தாளம் : ரூபகம்
இயற்றியவர் : ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்
பல்லவி
மாதங்க வதனாதி குருகுஹ ஜனனீ தனினி
மந்தஸ்மித மஹா தேவ மனோலாஸினி நளினி
சரணம்
ரமா மனோஹரி ராகேந்து சேகரி சுககரி
ரணத் கிங்கிணி மேகலா பாஸ்வரி சுந்தரி
வாமமார்க்க ப்ரியகரி ஷங்கரி ஸர்வேச்வரி