ॐ
விநாயகர் சதுர்த்தி - 31/08/2022, புதன்கிழமை
ॐ
விநாயகர் சதுர்த்தி - 31/08/2022, புதன்கிழமை
அல்லல் போம் வல்வினை போம்அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்போகாத் துயரம் போம் - நல்லகுணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைத்தொழுதக் கால்.
ஆம், நம் வாழ்வில், நம்முடைய அல்லல்களை எல்லாம் நீக்கி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்கிற எண்ணங்களை ஈடேற்றித் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். நம் விக்னங்களையெல்லாம் களைந்து விடுவார் கணபதி. துக்கங்களையும் துன்பங்களையும் நீக்கி விடுவார் தும்பிக்கையான். தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு, வாழ்வின் அடுத்தடுத்த வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு என நாம் வேண்டுவதையெல்லாம் கிடைக்கச் செய்வார் ஆனைமுகத்தான்!
விநாயகப்பெருமான் தனது அன்னை பார்வதி தேவியருடன் ஸ்ரீ கைலாயமலையிலிருந்து பூலோகத்திற்கு அவதரித்த தினமே (ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி) விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் - நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்.
ஆம், நம் வாழ்வில், நம்முடைய அல்லல்களை எல்லாம் நீக்கி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்கிற எண்ணங்களை ஈடேற்றித் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். நம் விக்னங்களையெல்லாம் களைந்து விடுவார் கணபதி. துக்கங்களையும் துன்பங்களையும் நீக்கி விடுவார் தும்பிக்கையான். தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு, வாழ்வின் அடுத்தடுத்த வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு என நாம் வேண்டுவதையெல்லாம் கிடைக்கச் செய்வார் ஆனைமுகத்தான்!
விநாயகப்பெருமான் தனது அன்னை பார்வதி தேவியருடன் ஸ்ரீ கைலாயமலையிலிருந்து பூலோகத்திற்கு அவதரித்த தினமே (ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி) விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
விநாயக சதுர்த்தி வரலாறு
இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இது இந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது.

மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். சுதந்திர போராட்டக் காலத்தில், இந்திய தேசிய தலைவர்களில் மிக முக்கிய பங்காற்றிய பாலகங்காதர திலகர் இதை ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர்.
ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும் வழங்குவர்.
மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். சுதந்திர போராட்டக் காலத்தில், இந்திய தேசிய தலைவர்களில் மிக முக்கிய பங்காற்றிய பாலகங்காதர திலகர் இதை ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர்.
விநாயகர் பெருமை
அனைத்து எழுத்துக்கும், ஓசைகளுக்கும், வேதங்களுக்கும் மூலமாக விளங்குவது "ஓம்" எனும் பிரணவம். அந்த பிரணவ ஸ்வரூபமே விநாயகர்.
தொடக்கம் என்பது இருந்தால் தான் முடிவு என்பது உண்டு. ஆகவே முதலும், முடிவும் இல்லாத முழு முதற் கடவுள் விநாயகர். அம்மையும் அப்பனும் இவரை கணங்களுக்கெல்லாம் தலைவராக்கியதால் இவர் "கணபதி, கணேசன், கணநாதர், கணாதிபன்" என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
விநாயகர் முன் தோப்புக்கரணம் இடுவதால், அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும்.
இவரது கருணையால் காவிரி நம் தமிழகத்தில் ஓடத்துவங்கியது. ஸூர்ய வம்சத்தினரால் வழிவழியாக பூஜிக்கப்பட்ட "ஸ்ரீ ரங்கநாத பெருமாள்" ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி, இந்த பூலோகத்தில் அருள் புரிவது விநாயகர் கருணையால் தான்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன.
இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு வேண்டிய
21 பத்ரம், புஷ்பம், பழம்
விநாயகர் சதுர்த்தி அன்று விக்னேஸ்வரருக்கு 21 பத்ரம் (இலை), 21 வகையான பூக்கள், 21 விதமான பழங்கள், 21 மோதகம் (கொழுக்கட்டை), 21 நமஸ்காரம் மற்றும் 21 தோப்புக்கரணம் போடுவது என்பது வழக்கமாக உள்ளது.
21 விதமான இலைகளும் அவற்றின் பலன்களையும் கீழே காணலாம்.
21 வகையான பூக்கள்
21 விதமான பழங்கள்
இவையனைத்தையும் கொண்டு விநாயகர் சதுர்த்தியை மிக சிறப்பாக கொண்டாடி அந்த விக்னேஸ்வரரின் அருளைப் பெற்று நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
விநாயக ஸ்தோத்திரங்கள்
கீழ்கண்ட கணேச ஸ்லோகங்களையும், ஸ்தோத்திரங்களையம் இந்த விநாயக சதுர்த்தி நன்நாளில் பாராயணம் செய்து விநாயகர் அருள் பெற்று இன்புற்று வாழ்வோமாக!
விநாயகரின் அறுபடை வீடு
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உள்ளது போலவே விநாயகருக்கும் உள்ளது. திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடவூர், மதுரை, பிள்ளையார்பட்டி மற்றும் திருநாரையூர் ஆகிய ஊர்களில் அவை உள்ளன. எங்கும் எளிதில் எழுந்தருள்பவரும், முதல் கடவுளும் ஆகிய விநாயகப்பெருமானை இவ்விடங்களில் வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை :
கிரிவலத்துக்கு புகழ் பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோயிலில் உள்ள ‘அல்லல்போம் விநாயகர்’ சன்னதியே விநாயகரின் முதல் படை வீடு ஆகும்.
‘அல்லல்’ என்றால் துன்பம், ‘போம்’ என்றால் நீக்குதல். அதாவது, தீராத துன்பத்தில் தவிப்பர்கள் இந்த அல்லல்போம் விநாயகரை தரிசித்தால் துன்பம் நீங்கும் என்பது ஐதீகம்.
நம்முடைய மலை போல் உள்ள அல்லல்களை பனி போல் கரையச்செய்வார் இந்த அல்லல்போம் விநாயகர்.
விருத்தாச்சலம் :
கணேசரின் இரண்டாவது படை வீடு விருத்தாசலத்தில் உள்ளது. இங்குள்ள விநாயகரின் பெயர் ஆழத்து பிள்ளையார் ஆகும். விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் சுமார் 18 அடி ஆழத்தில் உள்ளார்.
சில படிகள் இறங்கித்தான் இந்த ஆழத்துப் பிள்ளையாரை தரிசிக்க வேண்டும். இவரை வணங்கினால் சிறந்த கல்வி, செல்வம் மற்றும் சீரான வாழ்வு அமைவது நிச்சயம்.
திருக்கடவூர் :
நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், கள்ளவாரணப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
பாற்கடலை கடைந்து எடுத்த அமிர்தத்தை, மகாவிஷ்ணு அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். தனக்கு முதலில் கொடுக்காமல் மற்றவர்களுக்கு கொடுப்பதா என்ற செல்லமான கோபத்தில் அமிர்த குடத்தை எடுத்து ஒளித்து வைத்தாராம். அதனால்தான் அந்த பெயர் ஏற்பட்டுள்ளது.
ஒருவருக்கு வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட செல்வம், கல்வி, புகழ் மற்றும் அந்தஸ்து இருந்தாலும் அவற்றை தக்க வைத்துக்கொள்ள நீண்ட ஆயுள் வேண்டும். இந்த 3ம் படை விநாயகரை தரிசிப்பதால் நாம் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்கையையும் பெற முடியும்.
மதுரை :
விநாயகரின் நான்காம் படைவீடு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குள் உள்ளது. இவரது பெயர் காரிய சித்தி விநாயகர் ஆகும். நமக்கு ஏதாவது காரியம் நிறைவேற வேண்டும் என்றால் இந்த சித்திவிநாயகரை வணங்கலாம்.
‘நரியை பரியாக்கிய லீலை’ நடப்பதற்கு முன்பு மாணிக்கவாசகர், இந்த சித்தி விநாயகரைத்தான் வணங்கி சென்றாராம். எண்ணிய சிந்தனைகள் வெற்றியை தருவதே இந்த நான்காம் படை நாயகரின் சித்தம் என்கின்றனர் பெரியோர்கள்.
இவர் நமது தடைபட்ட காரியங்களை விக்னங்கள் இல்லாமல் வெற்றியுடன் நிறைவேற்றி கொடுப்பர்.
பிள்ளையார்பட்டி :
பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பகவிநாயகர் கணபதியின் ஐந்தாம் படைவீடாக கருதப்படுகிறது.
இவர் கையில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு நமக்கு அருள் பாலித்து வருகிறார்.
இவரை தரிசிப்பதன் மூலம் நாம் சிறந்த ஞானத்தையும், தீக்ஷையையும் பெற முடியும்.
திருநாரையூர் :
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரில் விநாயகரின் ஆறாம் படை வீடு அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரின் பெயர் பொள்ளாப்பிள்ளையார் ஆகும்.
இங்கும் மூலவர் சிவனாக இருந்தாலும், விநாயகரே முக்கியத்தவம் பெறுகிறார். ‘பொள்ளா’ என்றால் ‘உளியால் செதுக்காத’ என்று அர்த்தம். அதாவது, உளியால் செதுக்காமல் சுயம்புவாக உருவாகியவர் இந்த பொள்ளாப்பிள்ளையார்.
வியாபாரத்தில் வெற்றி வேண்டுமா? இந்த ஆறாம் படை கணபதியை தரித்து விட்டு வாருங்கள், உங்களுக்கு வியாபார அபிவிருத்தி நிச்சயம் உண்டாகும்.
இந்தப் பிள்ளையாரை தரிசித்துவிட்டு எந்த முயற்சியை நாம் மேற்கொண்டாலும் அதில் 100% வெற்றியைக் காணலாம். நமது அனைத்து முயற்சிகளுக்கும் கைமேல் பலனளிப்பவர் இந்த பொல்லாப்பிள்ளையார் ஆவார்.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
ஓம் கணேஷாய நம:
🙏